தியோதர் டிராபி: தினேஷ் கார்த்திக்கின் அபார சதத்தால் தமிழகம் சாம்பியன்!

தியோதர் டிராபி: தினேஷ் கார்த்திக்கின் அபார சதத்தால் தமிழகம் சாம்பியன்!

இறுதி ஆட்டத்தில் இந்தியா பி அணியை தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை...

தியோதர் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா பி அணியை தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து கோப்பையை வென்றுள்ளது.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழக அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன்கள் குவித்தது.

ரஞ்சி, விஜய் ஹசாரே மட்டுமில்லாமல் இந்த தியோதர் டிராபியிலும் சிறப்பாக விளையாடி வரும் தினேஷ் கார்த்திக், இன்றைய இறுதி ஆட்டத்தில் சதமெடுத்தார். அதிரடியாக ஆடிய அவர் 76 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார். பிறகு 91 பந்துகளில் 3 சிக்ஸர், 14 பவுண்டரிகளுடன் 126 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நான்காவதாகக் களமிறங்கிய ஜெகதீசன் 55 ரன்கள் எடுத்தார்.

இதன்பிறகு ஆடிய இந்தியா பி அணி, 461. ஓவர்களில் 261 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் தமிழக அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா பி அணியில் குர்கீரத் மன் 64 ரன்கள் எடுத்தார். தமிழக அணியின் தரப்பில் ரஹில் ஷா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சமீபத்தில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆனது. இதற்கு அடுத்ததாக தியோதர் டிராபியையும் வென்று சாதனை செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com