யுவராஜ் அதிரடி வீண்: டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.
யுவராஜ் அதிரடி வீண்: டெல்லி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 40-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

இரு அணிகளுக்கும் இடையே தில்லியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வென்றது.

முன்னதாக, டாஸ் வென்ற டெல்லி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாதில் தொடக்க வீரர் வார்னர், 21 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவர் முகமது சமி பந்துவீச்சில் போல்டானார்.

அவரைத் தொடர்ந்து கேன் வில்லியம்ஸன் களத்துக்கு வர, மறுமுனையில் நின்றிருந்த ஷிகர் தவன், 17 பந்துகளுக்கு 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 28 ரன்கள் எடுத்த நிலையில் அமித் மிஸ்ரா பந்துவீச்சில் ஷ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த யுவராஜ் சிங் அதிரடி காட்டினார். அவர் 34 பந்துகளில் 7 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் அரைசதம் கடந்தார். இந்நிலையில் கேன் வில்லியம்ஸன் முகமது சமி பந்துவீச்சில் கிறிஸ் மோரிஸிடம் கேட்ச் கொடுத்தார். அவர், 24 பந்துகளில் தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸருடன் 24 ரன்கள் எடுத்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து ஹென்ரிக்ஸ் களம் காண, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். யுவராஜ் சிங் 41 பந்துகளில் 11 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 70 ரன்களுடனும், ஹென்ரிக்ஸ் 18 பந்துகளில் 2 பவுண்டரி அடித்து 25 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். டெல்லி தரப்பில் முகமது சமி 2, அமித் மிஸ்ரா 1 விக்கெட் எடுத்தனர்.

டெல்லி வெற்றி: இதையடுத்து 186 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களம் கண்ட டெல்லி அணியில், தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 24 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

உடன் வந்த கருண் நாயர் 39 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். தொடர்ந்து வந்த ரிஷப் பந்த் 20 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்ஸருடன் 34, அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயர் 25 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

அவர்களை அடுத்து வந்த கோரே ஆண்டர்சன் சற்று அதிரடி காட்டினார். அவரும், கிறிஸ் மோரிஸும் இணைந்து அணியை வெற்றிக்கு வழி நடத்தினர்.

19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்து வென்றது டெல்லி. ஆண்டர்சன் 24 பந்துகளுக்கு 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 41 ரன்களுடனும், கிறிஸ் மோரிஸ் 7 பந்துகளுக்கு தலா ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸர் என 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஹைதராபாத் தரப்பில் முகமது சிராஜ் 2, புவனேஸ்வர் குமார், சித்தார்த் கெளல் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இன்றைய ஆட்டம்
கொல்கத்தா-புணே இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8, நேரடி ஒளிபரப்பு: சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com