புணே அணிக்குத் திருப்புமுனையை உண்டாக்கிய தமிழக வீரரின் பந்துவீச்சு!

17 வயது வாஷிங்டன் சுந்தர், புணே அணியின் சமீபத்திய தொடர் வெற்றிகளுக்கு ஒரு முக்கிய காரணம்.
புணே அணிக்குத் திருப்புமுனையை உண்டாக்கிய தமிழக வீரரின் பந்துவீச்சு!

17 வயது வாஷிங்டன் சுந்தர், புணே அணியின் சமீபத்திய தொடர் வெற்றிகளுக்கு ஒரு முக்கிய காரணம். சிக்ஸர் மழை பொழிகிற இந்த ஐபிஎல்-லில் பவர்பிளே-யில் சிறப்பாகப் பந்துவீசுகிறவர் என்கிற முத்திரை சுந்தர் மீது விழுந்துள்ளது.

இவரை அணியில் சேர்ப்பதற்கு முன்பு பவர்பிளே ஓவர்களில் புணே அணி தடுமாறி வந்தது. உதாரணமாக முதல் நான்கு ஆட்டத்தில் புணே அணி, பவர்பிளே-யில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் வழங்கியது. இதனால் அந்த முதல் நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்தது. ஆனால் கடைசி 7 ஆட்டங்களில் அந்த அணி பவர்பிளேயில் அசத்திவருகிறது. 7.40 ரன்கள் மட்டுமே வழங்கி எதிரணிகளை அதிக ரன்கள் எடுக்கவிடாமல் தடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் -  உனாட்கட், வாஷிங்டன் சுந்தர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் பந்துவீச்சு.

வாஷிங்டன் சுந்தர் புணேவின் கடந்த 6 ஆட்டங்களிலும் தவறாமல் இடம்பிடித்துள்ளார். முக்கிய காரணம், பவர்பிளேக்களில் இவருடைய பந்துவீச்சு மிகவும் சிக்கனமாக இருப்பதுதான். 

ஹைதராபாத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 3 ஓவர்கள் வீசி 19 ரன்கள் மட்டுமே கொடுத்தார் சுந்தர். அந்தப் போட்டியில் புணே அணி வெற்றிபெற்றது. அந்த ஆட்டத்தின்ல் பவர்பிளேயில் பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர், 2 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இது அவர்மீது அதிக நம்பிக்கையை வரவழைத்துள்ளது. 

இதுவரை 16 ஓவர்கள் வீசி 4 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தாலும் சுந்தரின் உபயோகமான பந்துவீச்சு புணே அணிக்கு நல்ல பலன்களை அளித்துவருகிறது. மிகக்குறைந்த எகானமி ரேட் (7.12) அவரை புணே அணியின் முக்கிய வீரராக மாற்றியுள்ளது. புணே கடைசி 7 ஆட்டங்களில் ஆறு ஆட்டங்களை வென்றிருப்பதில் வாஷிங்டன் சுந்தரின் பந்துவீச்சும் ஒரு முக்கிய காரணம். பவர்பிளே-யில் குறைவான ரன்கள் தருகிற (10 ஓவர்கள், எகானமி - 6.9) பந்துவீச்சாளர் என்கிற முத்திரையைப் பெற்றுள்ளார் சுந்தர். 

புணேவின் நட்சத்திர பந்துவீச்சாளர்ரா உனாட்கட் தான். அதேசமயம் அந்த அணியைப் பெரிய சரிவிலிருந்து மீட்டுக்கொண்டுவந்த பந்துவீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தரின் பங்களிப்பு மிக முக்கியமானது. 

புள்ளிவிவரங்கள்

* ஆறு ஆட்டங்கள், 16 ஓவர்கள், 4 விக்கெட்டுகள், எகானமி - 7.12

* பவர்பிளே: 10 ஓவர்கள்; எகானமி - 6.9

இந்த நிலையில் ஹைதராபாத்தில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 44-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும், ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸும் மோதுகின்றன. இது ஒரு முக்கியமான போட்டி. 

புணே அணி இதுவரை 11 ஆட்டங்களில் விளையாடி 14 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், ஹைதராபாத் 11 ஆட்டங்களில் விளையாடி 13 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்திலும் உள்ளன. இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இந்த ஆட்டத்தில் களம் காணுகின்றன.

சமீபத்திய தொடர் வெற்றிகளால் புணே அணி நம்பமுடியாத அளவுக்கு 3-வது இடத்துக்கு மேலேறி ஹைதராபாத்தைக் கீழே இறக்கியுள்ளது. இதனால் ஹைதராபாத் அணிக்குக் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பிளேஆஃப்-புக்கு நிச்சயம் தகுதி பெறும் என்கிற நிலையில் அந்த அணி திடீர் வீழ்ச்சியைச் சந்தித்துவருகிறது. அதிலிருந்து மீண்டு மீண்டும் 3-வது இடத்தைப் பிடிக்க இன்றைய வெற்றி மிகவும் அவசியமாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com