பிளேஆஃப் போட்டியைப் பலப்படுத்திய பஞ்சாப் வெற்றி!

இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது.
பிளேஆஃப் போட்டியைப் பலப்படுத்திய பஞ்சாப் வெற்றி!

நல்லவேளை நேற்றைய போட்டியில் பஞ்சாப் ஜெயித்தது. இல்லாவிட்டால் அந்தப் போட்டிக்கு முன்பு புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருந்த அணிகள் நேராக பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றிருக்கும். 

கொல்கத்தா-பஞ்சாப் அணிகளுக்கு இடையே மொஹாலியில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பந்துவீச தீர்மானித்தது. 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது பஞ்சாப். ஆனால் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் மட்டும் எடுத்து தோற்றது கொல்கத்தா. மோகித் சர்மா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி,  இதன்மூலம் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பைத் தக்கவைத்துக்கொண்டது.

ஐபிஎல் போட்டியில் இந்த வெற்றி மிக முக்கியமானதாகும். நேற்று மட்டும் பஞ்சாப் தோற்றுப்போயிருந்தால் அடுத்து நடக்கவுள்ள லீக் போட்டிகளுக்கு அர்த்தம் இல்லாமல் போயிருக்கும். 

இன்று கான்பூரில் குஜராத் - டெல்லி அணிகளுக்கு இடையே போட்டி நடைபெறவுள்ளது. தற்போது 4-ம் இடத்தில் உள்ள ஹைதராபாத் 15 புள்ளிகள் கொண்டுள்ளதால் இன்றைய ஆட்டம் பிளேஆஃப்-பில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. குஜராத் அணி ஏற்கெனவே பிளேஆஃப் போட்டியில் இல்லை. அதேபோல டெல்லி அணி மீதமுள்ள மூன்று போட்டிகளையும் வென்றாலும் அந்த அணியால் 14 புள்ளிகளுடன் 4-ம் இடத்தைக்கூட பிடிக்கமுடியாது.

நாளை பஞ்சாப் - மும்பை அணிகளுக்கிடையே போட்டி நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப் அணி வெற்றிபெறாவிட்டால் அந்த அணியாலும் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாது. மும்பை தற்போது 18 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 

ஹைதராபாத் சனியன்று நடைபெறுகிற ஆட்டத்தில் (குஜராத்துக்கு எதிராக) ஜெயித்துவிட்டால் 17 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுவிடும்.

வெள்ளியன்று நடைபெறுகிற டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் புணே தோற்றுவிட்டால் சிக்கல் ஆகிவிடும். அதிலும் பஞ்சாப் அடுத்த ஆட்டத்திலும் ஜெயித்துவிட்டால் பிறகு ஞாயிறு மதியம் நடைபெறுகிற புணே - பஞ்சாப் இடையேயான ஆட்டம் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறுகிற நான்காவது அணியை நிர்ணயிப்பதாக அமையும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com