பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் அணிகள் எவை? பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல்!

ஐபிஎல் போட்டியின் கடைசிக்கட்டம் இத்தனை பரபரப்பாக இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமுடியாது.
பிளேஆஃப்புக்குத் தகுதி பெறும் அணிகள் எவை? பரபரப்பான கட்டத்தில் ஐபிஎல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ஸைத் தோற்கடித்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். இதன்மூலம் பிளே ஆஃப் வாய்ப்பையும் தக்கவைத்துக் கொண்டது பஞ்சாப். 

பஞ்சாப்பின் இந்த வெற்றியால் பிளேஆஃப் போட்டிகள் விறுவிறுப்பாகியுள்ளன. ஹைதராபாத் அணி தனது கடைசி ஆட்டத்தில் குஜராத்திடம் தோற்று, பஞ்சாப் தனது கடைசி ஆட்டத்தில் புணேவை வீழ்த்தும்பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறலாம்.

புதன் அன்று டெல்லி ஜெயித்ததால் பரபரப்பான பிளேஆஃப் போட்டிகள் நேற்றைய பஞ்சாப்பின் வெற்றியால் மேலும் விறுவிறுப்பாக மாறியுள்ளது. 

இன்று டெல்லி - புணே அணிகளுக்கிடையே போட்டி நடைபெறுகிறது. இதில் டெல்லி தோற்றுவிட்டால் பிளேஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிவிடும். பதிலாக வெற்றிபெற்றுவிட்டால் பிளேஆஃப்-க்கான போட்டிகள் மேலும் பரபரப்பாகிவிடும்.

நாளை குஜராத்தை எதிர்கொள்கிறது ஹைதராபாத். இதில் வெற்றி கண்டால் 17 புள்ளிகளுடன் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுவிடும். 

ஞாயிறு அன்று புணே - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் பஞ்சாப் வெற்றி கண்டால் நிலைமை சிக்கலாகிவிடும்.

ஒருவேளை இன்றைய போட்டியில் டெல்லி வென்று பிறகு ஞாயிறு இரவு நடைபெறுகிற கடைசி லீக் போட்டியிலும் பெங்களூரையும் தோற்கடித்தால் அந்த அணியும் 16 புள்ளிகள் பெற்றுவிடும். 

நாளை நடைபெறுகிற மும்பை - கொல்கத்தா போட்டியின்போது கொல்கத்தா தோற்றுவிட்டால் ஐபிஎல் பரபரப்பின் உச்சத்துக்கே சென்றுவிடும்.

ஹைதராபாத் 17 புள்ளிகள் பெற்று கொல்கத்தா, புணே, டெல்லி, பஞ்சாப் ஆகிய அணிகள் 16 புள்ளிகள் வைத்திருந்தால் பிறகு ரன்ரேட் அடிப்படையில் 3-வது மற்றும் 4-வது அணிகள் தேர்வு செய்யப்படும். 

ஐபிஎல் போட்டியின் கடைசிக்கட்டம் இத்தனை பரபரப்பாக இருக்கும் என யாரும் எதிர்பார்த்திருக்கமுடியாது.

இன்றைய ஆட்டம்

டெல்லி-புணே

நாளைய ஆட்டங்கள்

குஜராத் - ஹைதராபாத்

கொல்கத்தா - மும்பை

ஞாயிறன்று...

புணே - பஞ்சாப்

டெல்லி - பெங்களூர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com