ஐபிஎல்: ஹைதராபாத் அணி அபார வெற்றி!

குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது.
ஐபிஎல்: ஹைதராபாத் அணி அபார வெற்றி!

குஜராத்துக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் ஹைதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி அடைந்துள்ளது. இதையடுத்து அந்த அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது.

கான்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மிகமுக்கியமான இப்போட்டியில் ஹைதராபாத் அணியைச் சேர்ந்த யுவ்ராஜ் சிங், காயம் காரணமாக இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக தீபக் ஹூடா இடம்பெற்றார். குஜராத் அணியில் பசில் தம்பி, தவல் குல்கர்ணிக்குப் பதிலாக பிரவீன் குமார், முனவ் படேல் ஆகியோர் தேர்வானார்கள்.

குஜராத் தொடக்க வீரர்களான டுவைன் ஸ்மித்தும் இஷான் கிஷனும் அபாரமாக விளையாடினார்கள். 111 ரன்கள் வரை இருவரையும் பிரிக்கமுடியாமல் போனது. இஷான் கிஷன் 27 பந்துகளில் அரை சதம் எடுத்தார். ஸ்மித்துக்கு அரை சதம் எடுக்க 31 பந்துகள் தேவைப்பட்டன. இருவரும் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்தபோது 54 ரன்களில் ஆட்டமிழந்தார் ஸ்மித். பிறகு இஷான் கிஷனும் 61 ரன்களில் வெளியேறினார். இதன்பிறகு ஹைதராபாத்தின் கை ஓங்கியது. குஜராத்தின் சரிவும் தொடங்கியது.

ரெய்னா, ஃபிஞ்ச் ஆகியோர் 2 ரன்களில் வெளியேற தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். பிறகு ஃபாக்னரும் 8 ரன்களில் வெளியேற தடுமாற ஆரம்பித்தது குஜராத் அணி.

கடைசியில் 19.2 ஓவர்களில் 154 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி 10 விக்கெட்டுகளை 43 ரன்களுக்கு இழந்தது குஜராத்.முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளையும் ரஷித் கான் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள்.

நம்பிக்கையுடன் ஆடத் தொடங்கிய ஹைதராபாத் அணி 3-வது ஓவரில் தவனை இழந்தது. அவர் 11 பந்துகளில் 18 ரன்கள் எடுத்தார். ஹென்ரிகஸ் 4 ரன்களில் வெளியேற 25 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது தவித்தது. ஆனால் அதன்பிறகு சேர்ந்த வார்னர் - விஜய் சங்கர் கூட்டணி அபாரமாக விளையாடியது. 41 பந்துகளில் அரை சதம் எடுத்தார் வார்னர். தமிழகத்தைச் சேர்ந்த விஜய் சங்கர் 35 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் அரை சதம் எடுத்தார்.

இறுதியில் ஹைதராபாத் அணி 18.1 ஓவர்களில் 158 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. வார்னர் 69, விஜய் சங்கர் 63 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்கள். இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com