ஐபிஎல் திரைக்கதையை எழுதுபவர் யார்?!: பிளேஆஃப்-புக்குப் போட்டி போடும் 5 அணிகள்!

ஒரு திரைப்படத்தின் பரபரப்பான திரைக்கதை போல உள்ளது. இரண்டு நாள்களும் ரசிகர்களுக்கு சரியான விருந்து...
ஐபிஎல் திரைக்கதையை எழுதுபவர் யார்?!: பிளேஆஃப்-புக்குப் போட்டி போடும் 5 அணிகள்!

ஐபிஎல் போட்டி, பாதி தூரம் கடந்திருந்தபோது நான்காவது இடத்துக்கு மட்டும்தான் கடும்போட்டி நிலவும் என்று கணிக்கப்பட்டது.

ஆனால் நாளையுடன் முடியும் லீக் சுற்றில் இன்னமும் மூன்றாவது மற்றும் நான்காவது அணிகள் நிர்ணயம் செய்யப்படவில்லை என்பது ஆச்சர்யமாக உள்ளது. இப்போதைக்கு மும்பையும் கொல்கத்தாவும் தான் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுள்ளன. இதனால் கடைசி இரு இடங்களுக்கு மூன்று அணிகள் போட்டி போடுகின்றன. அதோடு முதலிரண்டு இடங்களை அடையவும் கடும்போட்டி நிலவுகிறது.

சரி, பிளேஆஃப்புக்குத் தகுதி பெறவும் முதலிரண்டு இடங்களை அடையவும் அணிகள் என்ன செய்யவேண்டும்?

ஹைதராபாத்

கான்பூரில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும் மோதுகின்றன.

குஜராத் அணி ஏற்கெனவே அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டதால், இழப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் ஹைதராபாதை சந்திக்கிறது. ஆனால் ஹைதராபாத் அணிக்கோ, இது வாழ்வா, சாவா ஆட்டமாகும். இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருக்கும் ஹைதராபாத் அணி, குஜராத்தை வீழ்த்தும்பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிடும்.

மாறாக தோற்கும்பட்சத்தில், ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள புணே-பஞ்சாப் அணிகள் இடையிலான ஆட்டத்தின் முடிவுக்காக காத்திருக்க நேரிடும். அதில் பஞ்சாப் தோற்கும்பட்சத்தில், ஹைதராபாத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இல்லையெனில் போட்டியிலிருந்து வெளியேற நேரிடும்.

மும்பை

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.

மும்பை அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றிகளைப் பெற்று 18 புள்ளிகளுடன் ஏற்கெனவே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிவிட்டது. எனவே இந்த ஆட்டத்தில் தோற்றாலும், அதனால் மும்பை அணிக்கு எந்த பாதிப்பும் இல்லை. எனினும் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடிப்பதில் மும்பை அணி தீவிரமாக உள்ளது.

கொல்கத்தாவை வீழ்த்தும்பட்சத்தில் மும்பை அணி, புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவிடும். மாறாக தோற்கும்பட்சத்தில் புணேவின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தே மும்பைக்கு முதல் இரு இடங்கள் கிடைக்குமா என்பது தெரியவரும்.

கொல்கத்தா

கொல்கத்தாவில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 54-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸும் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன. கொல்கத்தா அணி இந்த ஆட்டத்தில் மும்பையை வீழ்த்தும்பட்சத்தில் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்வதோடு, புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களைப் பிடித்துவிடும்.

புணே

புணேவில் நாளை புணே - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் புணே வெற்றிபெற்றால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுவிடும். சரி, தோற்றுப்போய்விட்டால்?

அப்போதும் தகுதி பெறமுடியும். ஆனால் கான்பூரில் இன்று நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 53-ஆவது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாதும் மோதுகின்றன. இதில் ஹைதராபாத் ஜெயித்துவிட்டால் புணேவுக்குச் சிக்கல் ஆகிவிடும். புணே அணியா பிளேஆஃப்-புக்குத் தகுதி பெறமுடியாமல் போய்விடும். ஆக கடைசிப் போட்டியில் புணே தோற்கக்கூடாது. அப்படியே தோற்றாலும் ஹைதராபாத் ஜெயிக்கக்கூடாது. இவ்வளவுதான். 

பஞ்சாப்

புணேவில் நாளை புணே - பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இதில் பஞ்சாப் ஜெயித்துவிட்டால் பிளேஆஃப்-புக்குத் தகுதி பெற்றுவிடும். தோற்றால் அவ்வளவுதான். தகுதிபெறமுடியாது.

*

ஐபிஎல் போட்டியின் கடைசிக்கட்டம் இந்தளவுக்கு விறுவிறுப்பாக அமையும் என யாருமே எதிர்பார்த்திருக்கமுடியாது. ஒரு திரைப்படத்தின் பரபரப்பான திரைக்கதை போல உள்ளது. இரண்டு நாள்களும் ரசிகர்களுக்கு சரியான விருந்து காத்திருக்கிறது.

இதில் ஒரே சோகம் - லீக் சுற்றின் கடைசிப் போட்டியில் பெங்களூர் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இதில் யார் ஜெயித்தாலும் தோற்றாலும் அது பிளேஆஃப் வரிசையைப் பாதிக்காது. 

குஜராத் - ஹைதராபாத்

வெற்றியாளர்

கொல்கத்தா - மும்பை

வெற்றியாளர்

புணே - பஞ்சாப்

வெற்றியாளர்

பிளேஆப் இடங்கள்

(இந்த வரிசையில் அமையலாம்)

குஜராத்மும்பைபஞ்சாப்மும்பை, கொல்கத்தா, பஞ்சாப், புணே
குஜராத் மும்பைபுணேமும்பை, புணே, கொல்கத்தா, ஹைதராபாத்
குஜராத்கொல்கத்தாபஞ்சாப்கொல்கத்தா, மும்பை, பஞ்சாப், புணே
குஜராத்கொல்கத்தாபுணேகொல்கத்தா, மும்பை, புணே, ஹைதராபாத்
ஹைதராபாத்கொல்கத்தாபஞ்சாப்கொல்கத்தா, மும்பை, ஹைதராபாத், பஞ்சாப்
ஹைதராபாத்கொல்கத்தாபுணேகொல்கத்தா, மும்பை, புணே, ஹைதராபாத்
ஹைதராபாத்மும்பைபஞ்சாப்மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, பஞ்சாப்
ஹைதராபாத்மும்பைபுணேமும்பை, புணே, ஹைதராபாத், கொல்கத்தா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com