சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடருக்கான இந்திய அணி: மணீஷ் பாண்டே 'அவுட்'; தினேஷ் கார்த்திக் 'இன்'!

இங்கிலாந்தில் வரும் ஜுன் 1-ஆம் தேதி துவங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில்  பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த ...
சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடருக்கான இந்திய அணி: மணீஷ் பாண்டே 'அவுட்'; தினேஷ் கார்த்திக் 'இன்'!

மும்பை: இங்கிலாந்தில் வரும் ஜுன் 1-ஆம் தேதி துவங்க உள்ள சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த மணீஷ் பாண்டே, காயம் காரணமாக விளையாட முடியாமல் போனதை அடுத்து, அவருக்குப் பதிலாக தினேஷ் கார்த்திக்  இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நடைபெற்று வரும் ஐ.பி.எல் போட்டித் தொடரில் குஜராத் அணியில் இடம் பிடித்திருந்த மனிஷ் பாண்டே, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொழுது காயமடைந்தார்.

இதன் காரணமாக சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டித் தொடரில் இடம் பெற்றிருந்த அவருக்கு பதிலாக தமிழகத்தைச்  சேர்ந்த   தினேஷ் கார்த்திக்குக்கு தன்னை மீண்டும் நிரூபிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தினேஷ் கார்த்திக் நீண்டகாலமாக மீண்டும் இந்திய அணியில் நுழைய வாய்ப்பு தேடி தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தார்.

2004-ல் அறிமுகமான தினேஷ் கார்த்திக், 71 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார், இதில் 24 போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளார். மொத்தம் 1313 ரன்களை 27.93 என்ற சராசரி அளவில் அவர் எடுத்துள்ளார். 2014-ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரே இவர் கடைசியாக ஆடிய சர்வதேச போட்டியாகும்.

சமீப காலங்களில் தினேஷ் தொடர்ச்சியாக உள்நாட்டு கிரிக்கெட்ட போட்டிகளில் சிறப்பாக ஆடி வருகிறார். ரஞ்சி டிராபி 2016-17 சீசனில் ஒரு சதம் 5 அரைசதங்களுடன் மொத்தம் 704 ரன்களை  54.15 என்ற சராசரியில் தினேஷ் கார்த்திக் எடுத்துள்ளார் .

மேலும் தற்போதைய ஐபிஎல்-10 தொடரில், குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் 361 ரன்களை குவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com