இறுதிச் சுற்றில் நுழைவது யார்? மும்பை-கொல்கத்தா இன்று மோதல்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதிச் சுற்றில் மும்பை இண்டியன்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.
இறுதிச் சுற்றில் நுழைவது யார்? மும்பை-கொல்கத்தா இன்று மோதல்

பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 2-ஆவது தகுதிச் சுற்றில் மும்பை இண்டியன்ஸும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோதுகின்றன.
முதல் தகுதிச் சுற்றில் புணேவிடம் தோற்ற மும்பை அணி, இந்த ஆட்டத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறுவதில் தீவிரமாக உள்ளது. அதேநேரத்தில் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணியையும் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
இந்த சீசனில் இரு லீக் ஆட்டங்களிலும் கொல்கத்தாவை வீழ்த்தியிருப்பதால் இந்த ஆட்டத்தில் மிகுந்த நம்பிக்கையோடு களமிறங்குகிறது மும்பை. ஆனால் கொல்கத்தா அணியோ லீக் சுற்றில் மும்பையிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பலம் வாய்ந்த பேட்டிங்: மும்பை அணி பேட்டிங், பெளலிங் என இரண்டிலும் வலுவாக உள்ளது. அந்த அணி பார்த்திவ் படேல், லென்டில் சிம்மன்ஸ், கேப்டன் ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, கிரண் போலார்ட், கிருனால் பாண்டியா, ஹார்திக் பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்களில் ஒருவர் நின்றால்கூட ஆட்டத்தின் போக்கை மாற்றிவிடுவார்கள்.
ஈடன் கார்டனில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 11 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து மும்பை அணிக்கு அசத்தல் வெற்றியைத் தேடித்தந்த பாண்டியா, இந்த முறையும் கொல்கத்தா பந்துவீச்சாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என நம்பலாம்.
வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, லசித் மலிங்கா, மெக்கிளெனகன், ஹார்திக் பாண்டியா கூட்டணி பலம் சேர்க்கிறது. சுழற்பந்து வீச்சில் கிருனால் பாண்டியா, கரண் சர்மா கூட்டணியை நம்பியுள்ளது மும்பை.
கொல்கத்தா: கொல்கத்தா அணியைப் பொறுத்தவரையில் கிறிஸ் லின்-சுநீல் நரேன் ஜோடி அதிரடி தொடக்கம் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஜோடி நல்ல தொடக்கம் ஏற்படுத்தும்பட்சத்தில் அந்த அணி பெரிய அளவில் ரன் குவிக்க வாய்ப்புள்ளது.
மிடில் ஆர்டரில் கேப்டன் கெளதம் கம்பீர், ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே, யூசுப் பதான், சூர்யகுமார் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். எனினும் கம்பீர், உத்தப்பா, பாண்டே ஆகியோர் மட்டுமே நல்ல ஃபார்மில் உள்ளனர். இந்த சீசனில் கம்பீர் 486 ரன்களும், மணீஷ் பாண்டே 396 ரன்களும், ராபின் உத்தப்பா 387 ரன்களும் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் யூசுப் பதானும், சூர்யகுமாரும் ரன் குவிக்க முடியாமல் திணறி வருவது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
வேகப்பந்து வீச்சில் உமேஷ் யாதவ், நாதன் கோல்ட்டர் நைல் கூட்டணியையும், சுழற்பந்து வீச்சில் சுநீல் நரேன், பியூஷ் சாவ்லா கூட்டணியையும் நம்பியுள்ளது கொல்கத்தா.
இதுவரை... இவ்விரு அணிகளும் இதுவரை 20 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் மும்பை 15 வெற்றிகளையும், கொல்கத்தா 5 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
போட்டி நேரம்: இரவு 8
நேரடி ஒளிபரப்பு:
சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com