ரோம் மாஸ்டர்ஸ்: வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் அலெக்சாண்டர்.
காலிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் அலெக்சாண்டர்.

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் 3-ஆம் நிலை வீரரான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வாவ்ரிங்கா 6-7 (1), 4-6 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரிடம் தோல்வி கண்டார்.
ஜான் இஸ்னர் தனது காலிறுதியில் குரோஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்கிறார். முன்னதாக சிலிச் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினைத் தோற்கடித்தார்.
ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியைத் தோற்கடித்தார்.
வெற்றி குறித்துப் பேசிய அலெக்சாண்டர், 'இது எனக்கு மிகச்சிறந்த ஆட்டமாகும். நான் சிறப்பாக ஆடியதாக நினைக்கிறேன். 'பேஸ் லைனில்' ஆக்ரோஷமாக ஆடினேன். ஃபாக்னினி இங்கு சிறப்பாக விளையாடக்கூடிய ஒருவர். அவர், தனது முந்தைய சுற்றில் உலகின் முதல் நிலை வீரரான பிரிட்டனின் முர்ரேவை தோற்கடித்திருந்தார். எனினும் நான் ஆக்ரோஷமாக ஆடியது எனக்கு சாதகமாக அமைந்தது' என்றார்.
இந்த சீசனில் இதுவரை 33 ஆட்டங்களில் விளையாடி 24 வெற்றிகளைப் பெற்றுள்ள அலெக்சாண்டர், தனது காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை எதிர்கொள்கிறார். முன்னதாக ரயோனிச் தனது முந்தைய சுற்றில் 6-3, 6-2 என்ற நேர் செட்களில் செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சைத் தோற்கடித்தார்.
காலிறுதியில் வீனஸ்: மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது முந்தைய சுற்றில் 6-1, 3-6, 6-1 என்ற செட் கணக்கில் பிரிட்டனின் ஜோகன்னா கோன்டாவை வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com