ஹைதராபாதுக்கு எதிரான வெற்றி: பெளலர்களுக்கு கம்பீர் பாராட்டு

சன்ரைஸர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதற்கு எங்கள் பந்துவீச்சாளர்களே காரணம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாதுக்கு எதிரான வெற்றி: பெளலர்களுக்கு கம்பீர் பாராட்டு

சன்ரைஸர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றதற்கு எங்கள் பந்துவீச்சாளர்களே காரணம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் கெளதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் புதன்கிழமை நடைபெற்ற வெளியேற்றும் சுற்றில் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாதை தோற்கடித்தது கொல்கத்தா.
இதில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி, கொல்கத்தாவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களே எடுத்தது. பின்னர் மழை பெய்ததைத் தொடர்ந்து கொல்கத்தாவுக்கு 6 ஓவர்களில் 48 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டன. ஆனால் கொல்கத்தா அணி 5.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது.
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கம்பீர் மேலும் கூறியதாவது: அனைத்து பாராட்டுகளும் பந்துவீச்சாளர்களையே சேரும். அவர்கள்தான் எளிதாக வெற்றி பெறும் வாய்ப்பை ஏற்படுத்தினார்கள். ஹைதராபாத் அணியை 128 ரன்களுக்கு கட்டுப்படுத்தியது அற்புதமானதாகும். இதேபோன்று 11 வீரர்களும் சிறப்பாக பீல்டிங் செய்து ரன்களைக் கட்டுப்படுத்தினோம். எனினும் மிகச் சிறிய இலக்கை துரத்தியபோது அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றமாக அமைந்தது. நாங்கள் பேட் செய்கிறபோது இன்னும் அதிக கவனம் தேவை என்றார்.
30 ரன்கள் குறைவு: தோல்வி குறித்துப் பேசிய ஹைதராபாத் கேப்டன் டேவிட் வார்னர், 'நாங்கள் 30 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். 30 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால், வெற்றி வாய்ப்பு எங்களுக்கு சாதகமாக இருந்திருக்கும். ஆடுகளம் பேட் செய்வதற்கு கடினமாக இருந்தது. அதேநேரத்தில் கொல்கத்தா பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். முதல் 6 ஓவர்கள் எங்களின் பேட்டிங் ஓரளவு நன்றாக இருந்தது. ஆனால் அதன்பிறகு மோசமாக அமைந்துவிட்டது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறலாம் என்ற நேர்மறையான எண்ணத்தோடே நாங்கள் பீல்டிங் செய்ய வந்தோம். அதேபோன்று 3 விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆனாலும் கொல்கத்தா அணி அவ்வளவு எளிதாக வெற்றியை விட்டுக்கொடுக்காது என்பது தெரியும். அதுதான் நடந்தது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com