ரோம் மாஸ்டர்ஸ் : அரையிறுதியில் அலெக்சாண்டர், ஜான் இஸ்னர்

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் ஜான் இஸ்னர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
மரின் சிலிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ஜான் இஸ்னர்.
மரின் சிலிச்சுக்கு எதிரான ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய ஜான் இஸ்னர்.

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், அமெரிக்காவின் ஜான் இஸ்னர் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஜான் இஸ்னர், போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த குரோஷியாவின் மரின் சிலிச்சை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டை 7-6 (3) என்ற கணக்கில் கைப்பற்றிய ஜான் இஸ்னர், அடுத்த செட்டை 2-6 என்ற கணக்கில் சிலிச்சிடம் இழந்தார். இதையடுத்து நடைபெற்ற 3-ஆவது செட்டில் இருவரும் அபாரமாக ஆட, அந்த செட் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் அபாரமாக ஆடிய ஜான் இஸ்னர் அந்த செட்டை 7-6 (2) என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.
ஜான் இஸ்னர் தனது அரையிறுதியில் அலெக்சாண்டர் ஸ்வெரேவை சந்திக்கிறார். முன்னதாக அலெக்சாண்டர் தனது காலிறுதியில் 7-6 (4), 6-1 என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சை வீழ்த்தினார்.
அரையிறுதியில் சைமோனா: மகளிர் ஒற்றையர் காலிறுதியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் எஸ்தோனியாவின் அனெட்டா கோன்டாவீட்டை தோற்கடித்தார். ஹேலப் தனது அரையிறுதியில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ஸை சந்திக்கிறார்.
முன்னதாக பெர்டென்ஸ் தனது காலிறுதியில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் ஆஸ்திரேலியாவின் டேரியா கேவ்ரில்லாவைத் தோற்கடித்தார்.
காலிறுதியில் போபண்ணா ஜோடி
ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த ஜோடி தங்களின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 4-6, 7-6 (7), 10-9 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் பெலிஸியானோ லோபஸ்-மார்க் லோபஸ் ஜோடியைத் தோற்கடித்தது.
போபண்ணா ஜோடி தங்களின் காலிறுதியில் பிரான்ஸின் பியர் ஹியூஸ்-நிகோலஸ் மஹத் ஜோடியை சந்திக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com