உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு தங்கம்

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் "காம்பவுன்ட்' அணி தங்கப் பதக்கம் வென்றது.
தங்கப் பதக்கத்துடன் அபிஷேக் வர்மா, ராஜூ ஸ்ரீதர், அமான்ஜீத் சிங்.
தங்கப் பதக்கத்துடன் அபிஷேக் வர்மா, ராஜூ ஸ்ரீதர், அமான்ஜீத் சிங்.

உலகக் கோப்பை வில்வித்தைப் போட்டியில் இந்திய ஆடவர் "காம்பவுன்ட்' அணி தங்கப் பதக்கம் வென்றது.
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றில் அபிஷேக் வர்மா, ராஜூ ஸ்ரீதர், அமான்ஜீத் சிங் ஆகியோர் அடங்கிய இந்திய அணி 226-221 என்ற புள்ளிகள் கணக்கில் கொலம்பியாவைத் தோற்கடித்தது. இவர்களில் ராஜூ ஸ்ரீதர், தமிழகத்தைச் சேர்ந்தவர்.
தங்கப் பதக்கம் வென்றது குறித்து இந்திய வீரர் அபிஷேக் வர்மா கூறுகையில், "இந்தப் போட்டியில் களமிறங்குவதற்கு முன்னதாக அனைத்து விஷயங்களையும் மிகத் துல்லியமாக திட்டமிட்டிருந்தோம். இந்த வாரம் முழுவதுமே சிறப்பாக செயல்பட்டோம்' என்றார்.
கலப்பு இரட்டையர் வெண்கலப் பதக்கத்துக்கான பிளே ஆஃப் சுற்றில் இந்தியாவின் அபிஷேக் வர்மா-ஜோதி சுரேகா ஜோடி 151-153 என்ற புள்ளிகள் கணக்கில் அமெரிக்காவின் ரியோ வில்டே-ஜேமி வான் நேட்டா ஜோடியிடம் தோல்வி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com