மாநில ஹாக்கி: ஐஓபி அணி சாம்பியன்

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில்
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு சுழற்கோப்பையை வழங்குகிறார் அரசு தலைமை கொறடா தாமரை. எஸ். ராஜேந்திரன்.
சாம்பியன் பட்டம் வென்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு சுழற்கோப்பையை வழங்குகிறார் அரசு தலைமை கொறடா தாமரை. எஸ். ராஜேந்திரன்.

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கி போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி) அணி சாம்பியன் ஆனது.
பசுபதி மற்றும் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழகம் சார்பில் கடந்த 40 ஆண்டுகளாக மாவட்ட அளவிலான ஹாக்கி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 11-ஆவது ஆண்டாக நடைபெற்ற மாநில அளவிலான ஹாக்கிப் போட்டி கடந்த புதன்கிழமை தொடங்கியது.
தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த போட்டியில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, வாடிப்பட்டி எவர்கிரீன் ஹாக்கி அணி, திருச்சி சோழன் ஹாக்கி அணி, சென்னை நகர போலீஸ் ஹாக்கி அணி, எப்.சி.ஐ, ராமநாதபுரம் மாவட்ட ஹாக்கி அணி, அரியலூர் ஹாக்கி அணி, ஐசிஎப். தெற்கு ரயில்வே ஹாக்கி அணி, மதுரை ரிசர்வ் லைன் ஹாக்கி அணி, தஞ்சாவூர் மாவட்ட ஹாக்கி அணி, திருநெல்வேலி ஹாக்கி அணி, திருநகர் ஹாக்கி அணி, கோவில்பட்டி தாமஸ் நகர் ஹாக்கி அணி, திண்டுக்கல் பாண்டியாஸ் ஹாக்கி அணி, தமிழ்நாடு போலீஸ் ஹாக்கி அணி உள்பட 16 அணிகள் பங்கேற்றன.
சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், தெற்கு ரயில்வே அணியும் மோதின. இதில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி டைபிரேக்கர் முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் தெற்கு ரயில்வே அணியை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
மாலையில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், வெற்றி பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு, அரசு தலைமை கொறடா தாமரை.எஸ்.ராஜேந்திரன், சுழற்கோப்பையை வழங்கினார். எம்.பி சந்திரகாசி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை பசுபதி மற்றம் டாக்டர் அப்துல் சாதிக் நினைவு ஹாக்கி கழக தலைவர் டி.எழில்நிலவன், செயலர் பாரதிதாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com