காலிறுதியில் ஜுவான் மார்ட்டினுக்கு எதிராக பந்தைத் திருப்பும்  ஜோகோவிச்.
காலிறுதியில் ஜுவான் மார்ட்டினுக்கு எதிராக பந்தைத் திருப்பும் ஜோகோவிச்.

ரோம் மாஸ்டர்ஸ்: இறுதிச் சுற்றில் அலெக்சாண்டர், சைமோனா

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ருமேனியாவின் சைமோனா ஹேலப் ஆகியோர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
இத்தாலி தலைநகர் ரோமில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் அலெக்சாண்டர் 6-4, 6-7 (5), 6-1 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரைத் தோற்கடித்தார். அலெக்சாண்டர் தனது இறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அல்லது ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை சந்திக்கவுள்ளார்.
மகளிர் ஒற்றையர் அரையிறுதியில் சைமோனா ஹேலப் 7-5, 6-1 என்ற நேர் செட்களில் நெதர்லாந்தின் கிகி பெர்டென்ûஸ தோற்கடித்தார். ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருக்கும் சைமோனா, அடுத்ததாக ஸ்பெயினின் கார்பைன் முகுருஸா அல்லது உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினாவை சந்திக்கவுள்ளார்.
அரையிறுதியில் ஜோகோவிச்: உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். அவர் தனது காலிறுதியில் 6-1, 6-4 என்ற நேர் செட்களில் ஆர்ஜென்டீனாவின் ஜுவான் மார்ட்டின் டெல்போட்ரோவை தோற்கடித்தார். ஜோகோவிச் தனது அரையிறுதியில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமை சந்திக்கிறார்.

நடால் தோல்வி

வெள்ளிக்கிழமை ஆடவர் ஒற்றையர் காலிறுதியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் 4-6, 3-6 என்ற நேர் செட்களில் ஆஸ்திரியாவின் டொமினிக் தீமிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் 7 முறை சாம்பியன் பட்டம் வென்றவரான நடால், கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வெற்றிகளைக் குவித்து வந்தார். அதனால் இந்தப் போட்டியிலும் அவரே சாம்பியன் பட்டம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காலிறுதியோடு வெளியேறியுள்ளார்.
தோல்விக்குப் பிறகு பேசிய நடால், "அடுத்த இரு தினங்கள் மல்லோர்காவில் மீன் பிடித்துக் கொண்டிருப்பேன். இல்லையெனில் கோல்ஃப் விளையாடிக் கொண்டிருப்பேன். எனக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது. நான் அதற்கு தகுதியானவன் என நினைக்கிறேன்.
திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் இருந்து பிரெஞ்சு ஓபனுக்கு தயாராவேன். பிரெஞ்சு ஓபன் எனக்கு மிக முக்கியமான போட்டியாகும். பிரெஞ்சு ஓபனில் சிறப்பாக ஆடும்பட்சத்தில் அதில் பட்டம் வெல்ல நல்ல வாய்ப்புள்ளது. அங்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன் என நம்புகிறேன்' என்றார்.

போபண்ணா, சானியா ஜோடிகள் தோல்வி

ஆடவர் இரட்டையர் காலிறுதியில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா-உருகுவேயின் பாப்லோ கியூவாஸ் ஜோடி 6-7 (5) , 7-6 (2), 10-12 என்ற செட் கணக்கில் பிரான்ஸின் பியர் ஹியூஸ்-நிகோலஸ் மஹத் ஜோடியிடம் தோல்வி கண்டது.
மகளிர் இரட்டையர் அரையிறுதியில் இந்தியாவின் சானியா மிர்ஸா-கஜகஸ்தானின் யாரோஸ்லாவா ஷ்வேடோவா ஜோடி 3-6, 6-7 (7) என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ்-சீன தைபேவின் யங் ஜன் சான் ஜோடியிடம் தோல்வி கண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com