ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் தோனி சொதப்புகிறாரா?

தோனி அதிக ரன்கள் எடுக்காதது அவருடைய அணிகளின் தோல்விகளுக்கு முக்கிய காரணமா?
ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் தோனி சொதப்புகிறாரா?

இதுவரை ஏழுமுறை ஐபிஎல் இறுதிப் போட்டிகளுக்குத் தகுதிபெற்ற தோனி, அப்போட்டிகளில் எந்தளவுக்குப் பங்களிப்பை அளித்துள்ளார்? 

இறுதிப் போட்டியில் பலமுறை தோற்றுப்போயிருப்பதால் ஒருவேளை தோனி அதிக ரன்கள் எடுக்காதது அவருடைய அணிகளின் தோல்விகளுக்கு முக்கிய காரணமா? வாருங்கள் பார்க்கலாம். 

ஐபிஎல் இறுதிப் போட்டிகளில் தோனி

2008: 29*
2010: 22
2011: 22
2012: 14*
2013: 63*
2015: 18
2017: 10

இதில் 2010,20111 ஆகிய ஆண்டுகளில் தோனி தலைமையேற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றுள்ளது. இதைப் பார்க்கும்போது மிகவும் மோசமாகவும் விளையாடாமல் அதேசமயம் நிறைய ரன்களும் எடுக்காமல் இறுதிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார் தோனி என்பது தெரியவருகிறது. சிலசமயங்களில் அவர் கடைசிப் பகுதியில் ஆட வருவதால் அதிக ரன்கள் எடுக்கமுடியாமல் போன நிலைமையும் ஏற்பட்டுள்ளது. 

2008: 13-வது ஓவரில் களமிறங்கிய தோனி 17 பந்துகளில் 29 ரன்கள் எடுத்தார். கடைசி வரை அவர் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
2010: சிஎஸ்கே முதல்முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. 12-வது ஓவரில் களமிறங்கிய தோனி, 15 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2011: 15-வது ஓவரில் மூன்றாவது வீரராகக் களமிறங்கிய தோனி, 13 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
2012: 18-வது ஓவரில் களமிறங்கிய தோனி, 9 பந்துகளில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 
2013: 149 ரன்கள் என்கிற இலக்கை எடுக்கமுடியாமல் சென்னை தடுமாறிய ஆட்டம் இது. எல்லோரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, கடைசி வரை நின்ற தோனி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
2015: இதுவும் ஒரு மோசமான தோல்வி. 203 ரன்கள் என்கிற இலக்கை எட்டமுடியாமல் 41 ரன்களில் தோற்றது சென்னை. 12-வது ஓவரில் களமிறங்கிய தோனி, 18 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2017: ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது மும்பை. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி 10 ரன்களில் ஆட்டமிழந்தார்.

தோனி போன்ற ஒரு முக்கியமான வீரரிடம் இருந்து ரசிகர்கள் இன்னும் அதிகமாக எதிர்பார்க்கிறார்கள். அது இறுதிப்போட்டிகளில் எதிரொலிக்கவில்லை என்பதே நிஜம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com