ஐபிஎல் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நிகழ்த்திய இரு சாதனைகள்!

நேற்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் நிகழ்த்திய இரு சாதனைகள்...
ஐபிஎல் இறுதிப் போட்டியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் நிகழ்த்திய இரு சாதனைகள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக சாம்பியன் ஆனது மும்பை இண்டியன்ஸ்.

 முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற பெருமையும் மும்பை வசமானது.

தமிழகத்தைச் சேர்ந்த 17 வயது வாஷிங்டன் சுந்தர், புணே அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு முக்கிய வீரராவார். ஐபிஎல் முடிவில் பவர்பிளே-யில் சிறப்பாகப் பந்துவீசுகிறவர் என்கிற முத்திரை சுந்தர் மீது விழுந்துள்ளது. 

இவரை அணியில் சேர்ப்பதற்கு முன்பு பவர்பிளே ஓவர்களில் புணே அணி தடுமாறி வந்தது. உதாரணமாக முதல் நான்கு ஆட்டத்தில் புணே அணி, பவர்பிளே-யில் ஒரு ஓவருக்கு 10 ரன்கள் வழங்கியது. இதனால் அந்த முதல் நான்கு ஆட்டங்களில் மூன்றில் தோல்வியடைந்தது. ஆனால் அதன்பிறகு வாஷிங்டன் சுந்தர், உனாட்கட், பென் ஸ்டோக்ஸ் போன்ற வீரர்களால் அந்த அணி விஸ்வரூபம் எடுத்து இறுதிச்சுற்று வரை முன்னேறியது. 

நேற்றைய போட்டியில் வாஷிங்டன் சுந்தர் செய்த இரு சாதனைகள்: 

ஐபிஎல் இறுதிப்போட்டியில் விளையாடிய இளம் வீரர்கள்

17 வயது 228 நாள்கள் வாஷிங்டன் சுந்தர் (2017)
19 வயது 178 நாள்கள் ஜடேஜா (2008) 
19 வயது 256 நாள்கள் மனிஷ் பாண்டே (2009) 

ஐபிஎல் இறுதிப் போட்டியில் 4 ஓவர்கள் வீசி குறைந்த ரன்கள் அளித்த வீரர்கள்

13 ரன்கள் வாஷிங்டன் சுந்தர்
16 ரன்கள் அஸ்வின்  
16 ரன்கள் கும்ப்ளே  
16 ரன்கள் ஆர்பி சிங்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com