ரோம் மாஸ்டர்ஸ்: அலெக்சாண்டர் சாம்பியன்

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
கோப்பையுடன் எலினா.
கோப்பையுடன் எலினா.

ரோம் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டம் வென்றார்.
இத்தாலி தலைநகர் ரோமில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் 6-4, 6-3 என்ற நேர் செட்களில் உலகின் 2-ஆம் நிலை வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சுக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
இந்த வெற்றியின் மூலம் ஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் அலெக்சாண்டர். இதுதவிர, கடந்த 10 ஆண்டுகளில் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். இதற்கு முன்னர் 2007-இல் ஜோகோவிச் தனது 19-ஆவது வயதில் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்றிருந்தார். இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் முன்னேறியுள்ளார் அலெக்சாண்டர்.
எலினா சாம்பியன்: மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா 4-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் ருமேனியாவின் சைமோனா ஹேலப்புக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.


ரோம் மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய எலினா, அதை சரியாகப் பயன்படுத்தி சாம்பியன் ஆகியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் 4-ஆவது பட்டத்தைக் கைப்பற்றியுள்ள எலினா, 31 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com