ஸ்பெயின் லீக்: ரியல் மாட்ரிட் சாம்பியன்

லா லிகா என்றழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது ரியல் மாட்ரிட்.
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ரியல் மாட்ரிட் அணியினர்.
சாம்பியன் பட்டம் வென்ற மகிழ்ச்சியில் ரியல் மாட்ரிட் அணியினர்.

லா லிகா என்றழைக்கப்படும் ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டம் வென்றது. கடந்த 5 ஆண்டுகளில் முதல்முறையாக கோப்பையை வென்றுள்ளது ரியல் மாட்ரிட்.
ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மலாகா அணியைத் தோற்கடித்தது.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 2-ஆவது நிமிடத்தில் ரொனால்டோ கோலடிக்க, 55-ஆவது நிமிடத்தில் பென்ஸீமா கோலடித்தார். இதனால் ரியல் மாட்ரிட் அணி 2-0 என்ற கோல் கணக்கில் எளிதாக வெற்றி கண்டது. இதன்மூலம் 23-ஆவது வெற்றியைப் பெற்ற மாட்ரிட் அணி 93 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
வெற்றி குறித்துப் பேசிய மாட்ரிட் பயிற்சியாளர் ஜினெடின் ஜிடேன், "எனது தொழில்முறை வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சியைத் தந்த தினம் இது. இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக நடனம் ஆட விரும்புகிறேன். இந்த லீகில் சாம்பியன் பட்டம் வெல்வது மட்டுமே எங்களின் நோக்கமாக இருந்தது.
நீண்ட நாள்களாக பட்டம் வெல்லாததால் இந்த முறை பட்டம் வெல்வதில் தீவிரமாக இருந்தோம். ரொனால்டோ எப்போதுமே மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியவர். இந்த முறையும் அதேபோன்று ஆரம்பத்திலேயே கோலடித்து திருப்புமுனையை ஏற்படுத்தினார். அவருடைய ஆட்டத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளேன்' என்றார். ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி, பின்னர் அதன் பயிற்சியாளராக செயல்பட்டு ஸ்பெயின் லீகில் கோப்பையை வென்று தந்த 6-ஆவது நபர் ஜினெடின் ஆவார்.
ரியல் மாட்ரிட் அணி, இந்த சீசனின் அனைத்து ஆட்டங்களிலும் கோலடித்தது. இந்த சீசனில் எதிரணிகளின் மைதானங்களில் 58 கோல்களை அடித்தது. இதுதான் ஒரு சீசனில் எதிரணிகளின் மைதானங்களில் ரியல் மாட்ரிட் அணி அடித்த அதிக கோல் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com