புரோ கபடி லீக் ஏலம்: ரூ.93 லட்சத்துக்கு வாங்கப்பட்டார் இந்திய வீரர் நிதின் தோமர்

புரோ கபடி லீக் போட்டியின் அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலத்தில், இந்திய வீரர் நிதின் தோமர் அதிகபட்சமாக ரூ.93 லட்சத்துக்கு வாங்கப்பட்டார்.
புரோ கபடி லீக் ஏலம்: ரூ.93 லட்சத்துக்கு வாங்கப்பட்டார் இந்திய வீரர் நிதின் தோமர்

புரோ கபடி லீக் போட்டியின் அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலத்தில், இந்திய வீரர் நிதின் தோமர் அதிகபட்சமாக ரூ.93 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். வெளிநாட்டு வீரர்கள் பிரிவில் ஈரானின் அபோஸர் மொஹஜெர்மிகானி ரூ.50 லட்சத்துக்கு ஏலம் போனார்.
புரோ கபடி லீக் போட்டியின் 5-ஆவது சீசன் வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் அந்தப் போட்டியில் பங்கேற்கும் 12 அணிகளுக்கான வீரர்களை தேர்வு செய்யும் 2 நாள் ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
இதில் இந்திய வீரர் நிதின் தோமரை இந்த ஆண்டு புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேச அணி அதிகபட்சமாக ரூ.93 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. அவரின் அடிப்படை விலை ரூ.20 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் தவிர உள்நாட்டு வீரர்களான ரோஹித் குமாரை ரூ.81 லட்சத்துக்கு பெங்களூரு புல்ஸ் அணியும், மஞ்ஜித் சில்லாரை ரூ.75.5 லட்சத்துக்கு ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணியும், சுர்ஜீத் சிங்கை ரூ.73 லட்சத்துக்கு பெங்கால் வாரியர்ஸ் அணியும் ஏலத்தில் எடுத்துள்ளன. தமிழகத்தைச் சேர்ந்த கே.செல்வமணியை ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் ரூ.73 லட்சத்திற்கு வாங்கியுள்ளது.
நட்சத்திர வீரர்களைப் பொருத்த வரையில், ராகுல் செளதரியை தெலுகு டைட்டன்ஸ் அணியும், அனுப் குமாரை யு மும்பா அணியும், ஜங் குன்லியை பெங்கால் வாரியர்ஸ் அணியும் தேர்வு செய்துள்ளன.
மீரஜ் ஷேக்கை தபங் தில்லி அணி, பர்தீப் நர்வாலை பாட்னா பைரேட்ஸ் அணி, தீபக் ஹூடாவை புணேரி பல்தான் அணி வாங்கியுள்ளன. இதில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி 4-ஆவது சீசனில் இருந்த தனது அணியை முழுமையாக மாற்றியுள்ளது.
வெளிநாட்டு வீரர்களில் ஈரானின் அபோஸர் மொஹஜெர்மிகானியை குஜராத் அணி ரூ.50 லட்சத்துக்கு வாங்கியது. அதே நாட்டின் அபோல்ஃபெல் மக்úஸாட்லோவை தில்லி அணி ரூ.31.8 லட்சத்துக்கும், ராஹிமி மிலாகார்தனை தெலுகு டைட்டன்ஸ் அணி ரூ.20.4 லட்சத்துக்கும் வாங்கியது. தாய்லாந்து வீரர் கோம்சன் தோங்காமை ரூ.20.4 லட்சத்துக்கு ஹரியாணாவும், ஈரானின் ஹாதி ஓஷ்டோராக்கை ரூ.18.6 லட்சத்துக்கு யு மும்பா அணியும் ஏலத்தில் எடுத்தன.
முதல் நாள் ஏலத்தில் 12 அணிகள் தங்களுக்கான 60 வீரர்களை மொத்தம் ரூ.27.27 கோடிக்கு வாங்கின. ஒவ்வொரு அணியும் தங்களிடம் உள்ள ஒரு 'எலைட்' வீரரை மட்டும் மீண்டும் தங்களது அணியிலேயே தொடரச் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அந்த வீரர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரராக இருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அணிகளுக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதில் ஹரியாணா அணி முதல் தேர்வாக சுரேந்தர் நடாவையும், குஜராத் அணி தனது முதல் தேர்வாக ஈரான் வீரரான ஃபாùஸல் அட்ராசலியையும் வாங்கின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com