சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன்: காலிறுதியில் இன்று இந்தியா-சீனா மோதல்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் சுதிர்மான் கோப்பை பாட்மிண்டன் போட்டியில், வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் இந்தியா-சீனா அணிகள் மோதுகின்றன.

சுதிர்மான் கோப்பை போட்டியில் இந்தியா காலிறுதிக்கு முன்னேறியிருப்பது இது 2-ஆவது முறையாகும். முன்னதாக கடந்த 2011-ஆம் ஆண்டு காலிறுதிக்கு முன்னேறியிருந்த இந்தியா, அதில் சீனாவிடம் 1-3 என்ற கணக்கில் தோற்று வெளியேறியது.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஸ்ரீகாந்த், சீனாவின் இரு முறை ஒலிம்பிக் சாம்பியனான லின் டான் அல்லது நடப்பு ஒலிம்பிக் சாம்பியனான சென் லாங் ஆகியோரில் ஒருவருடன் மோதவுள்ளார்.
மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, உலகின் 7-ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் ஹி பிங்ஜியாவ் அல்லது உலகின் 6-ஆம் நிலை வீராங்கனையான சன் யு ஆகியோரில் ஒருவருடன் மோதுகிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில் சுமீத் ரெட்டி-மானு அத்ரி இணை, லியு யுசென்-லி ஜுன்ஹுய் ஜோடியுடனோ அல்லது ஜாங் நான்-ஃபு ஹாய்ஃபெங் ஜோடியுடனோ களம் காணும்.
மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா-என். சிக்கி ரெட்டி ஜோடி, சீனாவின் சென் கிங்சென்-ஜியா யிஃபான் இணையுடனோ அல்லது பாவ் யிஜின்-டாங் ஜின்ஹுவா இணையுடனோ களம் காண உள்ளது.
கலப்பு இரட்டையர் பிரிவில் அஸ்வினி-சாத்விக்சாய்ராஜ் ஜோடி, சீனாவின் லு காய்-ஹுவாங் யாகியாங் ஜோடியுடன் மோத உள்ளது.
இதனிடையே, வெள்ளிக்கிழமை நடைபெறும் மற்றொரு காலிறுதியில் ஜப்பான்-மலேசியா அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com