தேசிய கூடைப்பந்து: புது தில்லி ஏர்போர்ஸ் அணிக்கு கோப்பை

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் புது தில்லி ஏர்போர்ஸ் அணி, சென்னை கஸ்டம்ஸ் அணியை 87-84 என்ற கணக்கில் போராடி வென்றது.

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் புது தில்லி ஏர்போர்ஸ் அணி, சென்னை கஸ்டம்ஸ் அணியை 87-84 என்ற கணக்கில் போராடி வென்றது.
கரூரில் எல்ஆர்ஜி நாயுடு கோப்பைக்கான தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி கடந்த 21 ஆம் தேதி முதல் திருவள்ளுவர் மைதானத்தில் நடைபெற்றுவந்தது.
குரூப் "ஏ' பிரிவில் சென்னை ஐஓபி, புது தில்லி சிஆர்பிஎப், இந்தியன் நேவி, சென்னை ஐசிஎப் ஆகிய அணிகளும், "பி' பிரிவில் கபூர்தாலா ரயில்வே கோச் அணி, புது தில்லி ஏர்போர்ஸ், வாரணாசி டிஎல்டபிள்யூ, சென்னை கஸ்டம்ஸ் ஆகிய அணிகளும் விளையாடின.
நாக் அவுட் முறையில் நடைபெற்ற இப்போட்டியில், வியாழக்கிழமை காலை மூன்றாமிடம் மற்றும் நான்காமிடத்திற்கான போட்டிகளில் சென்னை ஐஓபி அணியும், இந்தியன் நேவி அணியும் மோதின. இதில் 56-39 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை ஐஓபி அணி வெற்றி பெற்றது.
இதைத்தொடர்ந்து முதல் 2 இடங்களுக்கான இறுதிப்போட்டியில், சென்னை கஸ்டம்ஸ் அணியும், புது தில்லி ஏர்போர்ஸ் அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் புது தில்லி ஏர்போர்ஸ் அணி 87-84 என்ற புள்ளிகள் கணக்கில் சென்னை கஸ்டம்ஸ் அணியை போராடி தோற்கடித்தது.
முதலிடம் பிடித்த புது தில்லி ஏர்போர்ஸ் அணிக்கு பரிசாக ரூ.50,000 மற்றும் கோப்பை, இரண்டாமிடம் பிடித்த சென்னை கஸ்டம்ஸ் அணிக்கு ரூ.30,000 மற்றும் கோப்பை, மூன்றாமிடம் பிடித்த சென்னை ஐஓபி அணிக்கு ரூ.25,000, நான்காமிடம் பிடித்த இந்தியன் நேவி அணிக்கு ரூ.20,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.
வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுகளை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார். ஏற்பாடுகளை மாவட்ட கூடைப்பந்து கழகச் செயலாளர் எம்.முகமது கமாலுதீன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com