பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

லண்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இலங்கை 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. அடுத்து பேட் செய்த ஆஸ்திரேலியா 49.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 319 ரன்கள் எடுத்து வென்றது.
முன்னதாக, டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட் செய்த இலங்கை அணியில் கேப்டன் மேத்தியூஸ் அதிகபட்சமாக 106 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 95 ரன்கள் எடுத்தார். தொடக்க வீரர் திக்வெல்லா 41, உபுல் தரங்கா 13, மெண்டிஸ் 5, சண்டிமல் 17, கபுகெடரா 30, சீகுகே பிரசன்னா 31 ரன்களில் வீழ்ந்தனர். குணரத்னே 70, திசர பெரெரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். ஆஸ்திரேலியத் தரப்பில் மொய்ஸஸ் ஹென்ரிக்ஸ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் ஃபிஞ்ச் அதிகபட்சமாக 109 பந்துகளில் 11 பவுண்டரி, 6 சிக்ஸர்களுடன் 137 ரன்கள் எடுத்தார். கேப்டன் வார்னர், கிறிஸ் லின் தலா 19, ஹென்ரிக்ஸ் 10, மேத்யு வேட் 13, ஸ்டாய்னிஸ் 15, பட்டின்சன் 9 ரன்கள் எடுத்தனர்.
டிராவிஸ் ஹெட் 85, பட் கம்மின்ஸ் 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் நுவன் பிரதீப் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com