பிரெஞ்சு ஓபன்: அரையிறுதியில் ஜோகோவிச்-நடால் மோத வாய்ப்பு

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் நடப்புச் சாம்பியன் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் மோத வாய்ப்பு உள்ளது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 'டிரா' நிகழ்வின்போது தங்களது கோப்பைகளுடன் பங்கேற்ற நடப்புச் சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கார்பின் முகுருஸா.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 'டிரா' நிகழ்வின்போது தங்களது கோப்பைகளுடன் பங்கேற்ற நடப்புச் சாம்பியன்களான நோவக் ஜோகோவிச், கார்பின் முகுருஸா.

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவின் அரையிறுதியில் நடப்புச் சாம்பியன் நோவக் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் மோத வாய்ப்பு உள்ளது.
பிரெஞ்சு ஓபனில், தரவரிசை அடிப்படையில் யாருடன் யார் மோத வாய்ப்புள்ளது என்பதைக் கணிக்கும் "டிரா' (குலுக்கல்) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதன்படி, ஆடவர் பிரிவின் அரையிறுதியில் ஜோகோவிச்-நடால் மோத வாய்ப்புள்ளது.
நடால் தனது "10-ஆவது பட்டம்' கனவுடன் களம் காண, கோப்பையை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பில் இருக்கிறார் ஜோகோவிச்.
அதேபோல், மற்றொரு அரையிறுதியில் உலகின் முதல் நிலை வீரரான ஆன்டி முர்ரேவும், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவும் மோத வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
தற்போதைய டிராவின் படி ஆட்டம் நகரும் பட்சத்தில், முர்ரே தனது காலிறுதியில் ஜப்பானின் கெய் நிஷிகோரியை சந்திப்பார். மற்றொரு காலிறுதியில் வாவ்ரிங்கா, குரேஷியாவின் மரின் சிலிச்சை சந்திக்க வாய்ப்புள்ளது.
அதேபோல் இதர 2 காலிறுதிகளில் ஒன்றில் நடாலுடன், கனடாவின் மிலோஸ் ரயோனிச்சும், மற்றொன்றில் ஜோகோவிச்சுடன், ஆஸ்திரியாவின் டொமினிக் தீமும் மோதுவர்.
இந்நிலையில் முர்ரே தனது முதல் சுற்றில் ரஷியாவின் ஆன்ட்ரே குஸ்நெட்úஸாவை சந்திக்கிறார். அதேபோல் ஜோகோவிச், ஸ்பெயின் வீரர் மார்செல் கிரானோலர்ஸூடனும், நடால், பிரான்ஸ் வீரர் பெனாய்ட் பேருடனும் மோதுகின்றனர்.
மகளிர் பிரிவு: மகளிர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது முதல் சுற்றில் ரஷியாவின் எகாடெரினா மகரோவாவை சந்திக்கிறார். டிராவின் படி அவர் தனது அரையிறுதியில் நடப்புச் சாம்பியனான ஸ்பெயின் வீராங்கனை கார்பின் முகுருஸாவை சந்திக்க வாய்ப்புள்ளது.
இதேபோல் கார்பின் முகுருஸா தனது முதல் சுற்றில் இத்தாலியின் பிரான்செஸ்கா ஷியாவோனை சந்திக்கிறார். போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருக்கும் செக் குடியரசின் கரோலினா பிலிஸ்கோவா, தனது அரையிறுதியில் ருமேனியாவின் சைமோனா ஹேலப்பை சந்திக்க வாய்ப்புள்ளது. கரோலினா தனது முதல் சுற்றில் சீனாவின் ùஸங் சாய்சாயை சந்திக்கிறார்.
காயத்திலிருந்து மீண்டு வரும் சைமோனா ஹேலப், பிரெஞ்சு ஒபனில் பங்கேற்பது குறித்து உறுதியாகத் தெரிவிக்கவில்லை.
டிராவின் படி, கெர்பர் தனது காலிறுதியில் ஸ்வெட்லனா குஸ்நெட்சோவாவை சந்திக்க வாய்ப்புள்ளது. அதேபோல் முகுருஸா தனது காலிறுதியில் ஸ்லோவேகியாவின் டொமினிகா சிபுல்கோவாவை சந்திக்கலாம்.
இதர 2 காலிறுதிகளில் ஒன்றில் உக்ரைனின் எலினா ஸ்விடோலினாவுடன், சைமேனா ஹேலப்பும், மற்றொன்றில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவுடன், கரோலினா பிலிஸ்கோவாவும் மோத வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com