பந்து சேதமான விவகாரம்: டி வில்லியர்ஸ் அதிருப்தி

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தின்போது தென் ஆப்பிரிக்க அணியால் பந்து சேதப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டதற்கு அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பந்து சேதமான விவகாரம்: டி வில்லியர்ஸ் அதிருப்தி

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது ஒருநாள் ஆட்டத்தின்போது தென் ஆப்பிரிக்க அணியால் பந்து சேதப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டதற்கு அந்த அணியின் கேப்டன் டி வில்லியர்ஸ் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
அந்த இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தின் 33-ஆவது ஓவரின்போது, நடுவர்களிடம் சென்ற டி வில்லியர்ஸ் பந்தை மாற்றுவதற்கு முயன்றதாகத் தெரிகிறது. அப்போது, தென் ஆப்பிரிக்க வீரர்களால் பந்து சேதப்படுத்தப்பட்டதாக நடுவர்கள் சந்தேகித்ததாக கூறப்பட்டது.
இதுகுறித்து, போட்டிக்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பின்போது டி வில்லியர்ஸ் கூறியதாவது:
பந்து சேதப்படுத்தப்பட்டிருந்ததாக நடுவர்கள் எண்ணினர். தென் ஆப்பிரிக்க வீரர்களால் தான் பந்து சேதப்படுத்தப்பட்டது போன்ற உணர்வை இது எனக்கு ஏற்படுத்தியது.
இதனால் சற்று அதிருப்தி அடைந்தேன். எனவே, எங்களால் பந்து சேதப்படுத்தப்படவில்லை என நடுவர்களிடம் விளக்கினேன். பொதுவாக, பந்து சேதப்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தால், சம்பந்தப்பட்ட அணிக்கு எச்சரிக்கை விடப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும்.
ஆனால், அந்த இரு சம்பவங்களுமே நடைபெறாததால் நாங்கள் தவறு செய்யவில்லை என்பதை அவர்கள் உணர்ந்ததாகத் தெரிகிறது. உண்மையில் அந்தப் பந்து நல்ல நிலையில் இல்லை. ஆனால் நடுவர்கள் அதை ஏற்கத் தயாராக இல்லை என்று டி வில்லியர்ஸ் கூறினார். கடந்த நவம்பரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது பந்தை சேதப்படுத்தியதாக தென் ஆப்பிரிக்க டெஸ்ட் கேப்டன் டு பிளெஸ்ஸிஸýக்கு அபராதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது இத்தகைய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com