பிரெஞ்சு ஓபன்: கெர்பர் அதிர்ச்சித் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவருமான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது முதல் சுற்றிலேயே
பிரெஞ்சு ஓபன்: கெர்பர் அதிர்ச்சித் தோல்வி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில், உலகின் முதல்நிலை வீராங்கனையும், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்தவருமான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் தனது முதல் சுற்றிலேயே தோல்வி கண்டார்.

அவரை, ரஷியாவின் எகாடெரினா மகரோவா 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
முதல் முறை: பிரெஞ்சு ஓபன் டென்னிஸில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் வீராங்கனை ஒருவர் தனது முதல் சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறுவது இது முதல் முறையாகும்.
இதுகுறித்து வெற்றிக்குப் பிறகு பேசிய மகரோவா கூறியதாவது:
எனது வெற்றி இத்தகைய வரலாற்றை உருவாக்கியுள்ளது என்பதை என்னால் நம்ப முடியவில்லை.முதல்நிலை வீராங்கனை யான கெர்பருக்கு எதிரான ஆட்டம் மிகக் கடுமையானதாக இருந்தது. எனினும், இந்தப் போட்டியில் நான் வெற்றி பெற வேண்டியதன் முக்கியத்துவத்தை அறிந்திருந்தேன். ஆனால் அவர் விட்டுக் கொடுப்பதாய் இல்லை.
நானும், உணர்வுகளின் உந்துதல் காரணமாக விடாமல் போராடி வெற்றி பெற்றேன் என்று மகரோவா கூறினார்.
குவிட்டோவா வெற்றி: இதனிடையே, மகளிர் பிரிவின் மற்றொரு முதல் சுற்றில் செக் குடியரசின் பெட்ரா குவிட்டோவா 6-3, 6-2 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் ஜூலியா போஸரப்பை வீழ்த்தினார்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கொள்ளை முயற்சியின்போது கத்தியால் தாக்கப்பட்டதில் குவிட்டோவாவின் கைகளில் காயம் ஏற்பட்டது. அதற்காக சிகிச்சை பெற்ற அவர், அந்தச் சம்பவத்துக்குப் பிறகு பங்கேற்கும் முதல் டென்னிஸ் போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றிக்குப் பிறகு பேசிய குவிட்டோவா, "இந்த ஆட்டத்தில் எவ்வாறு விளையாடினேன் என்பது முக்கியமில்லை எனக் கருதுகிறேன். எனினும் அதில் வென்று விட்டேன். ஓய்வுக்குப் பிறகு பிரெஞ்சு ஓபனில் விளையாட மேற்கொண்ட முடிவினால் மகிழ்கிறேன். இக்கட்டான காலங்களில் உடன் இருந்த எனது பெற்றோர் மற்றும் சகோதரருக்கு நன்றிகள்' என்றார்.
இந்நிலையில், இதர முதல் சுற்று ஆட்டங்களில், ரியோ ஒலிம்பிக் தங்க மங்கையான போர்டா ரிகாவின் மோனிகா பிக் 6-3, 3-6, 6-2 என்ற செட் கணக்கில் இத்தாலியின் ராபர்டா வின்சியை வீழ்த்தினார். ரஷியாவின் ஸ்வெட்லனா குஸ்நெட்úஸாவா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் அமெரிக்காவின் கிறிஸ்டினா மெக்ஹாலேவை வென்றார்.
மற்றொரு ஆட்டத்தில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், 6-4, 7-6(3) என்ற செட் கணக்கில் சீனாவின் வாங் கியாங்கை வீழ்த்தினார்.

களம் காணும் பயஸ் ஜோடி

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், அமெரிக்காவின் ஸ்காட் லிப்ஸ்கியுடன் இணைந்து களம் காண்கிறார்.
இந்த ஜோடி தங்களது முதல் சுற்றில் சைப்ரஸின் மார்கோஸ் பக்தாதிஸ்-லக்ஸம்பெர்கின் கில்லெஸ் முல்லர் இணையை எதிர்கொள்ள உள்ளது.
பயஸ்-லிப்ஸ்கி ஜோடி சமீபத்தில் ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com