வாள்வீச்சு சாம்பியன்ஷிப்: பவானி தேவிக்கு தங்கம்

ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார்.
வாள்வீச்சு சாம்பியன்ஷிப்: பவானி தேவிக்கு தங்கம்

ஐஸ்லாந்தில் நடைபெற்ற சர்வதேச வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்றார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "பவானி தேவி தனது அரையிறுதியில் பிரிட்டன் வீராங்கனை ஜெஸிகா கார்பியை 15-11 என்ற கணக்கில் வென்ற நிலையில், இறுதிச் சுற்றில் அதே நாட்டைச் சேர்ந்த சாரா ஜேன் ஹாம்சனை 15-13 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.

சர்வதேச வாள்வீச்சு போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் வீராங்கனை பவானி தேவி ஆவார்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தனது வெற்றி குறித்து பவானி தேவி கூறுகையில், "இந்த சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியில் 3-ஆவது முறையாக பங்கேற்றுள்ளேன். முந்தைய சீசன்களில் காலிறுதி வரை முன்னேறி தோல்வி அடைந்தேன்.

ஏற்கெனவே ஆசிய சாம்பியன்ஷிப் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்றுள்ள நிலையில், உலக அளவிலான போட்டியில் பதக்கம் வெல்வது இது முதல் முறையாகும். இந்தப் போட்டியின் காலிறுதி முதலே ஆட்டம் கடினமாகத் தொடங்கியது. அரையிறுதி மற்றும் இறுதிச் சுற்றில் மிகவும் கடுமையாகப் போராடி வெற்றி பெற வேண்டியிருந்தது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com