தோனியின் ஆட்டத்தில் முன்னேற்றம் இல்லாவிட்டால் மாற்று வீரரைத் தேர்வு செய்ய கங்குலி யோசனை!

வருங்காலத்தில் தோனியால் தன் ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரமுடியாவிட்டால் அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளுக்கு..
தோனியின் ஆட்டத்தில் முன்னேற்றம் இல்லாவிட்டால் மாற்று வீரரைத் தேர்வு செய்ய கங்குலி யோசனை!

வருங்காலத்தில் தோனியால் தன் ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரமுடியாவிட்டால் அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளுக்கு ஆயத்தமாகவேண்டும் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியா-நியூஸிலாந்து டி20 தொடர் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவடைந்தது. இந்தத் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இந்தியா வெற்றி பெற்றது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் நடைபெற்ற 2-ஆவது டி20 ஆட்டத்தில் தோனி 49 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது. இதையடுத்து, டி20 போட்டிகளில் இளைஞர்களுக்கு வழிவிடுவது குறித்து முன்னாள் கேப்டன் தோனி சிந்திக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லஷ்மண் தெரிவித்திருந்தார். அணியில் தோனியின் பங்களிப்பை அவருக்கு குழு மேலாண்மை புரிய வைக்க வேண்டும் என்று முன்னாள் அதிரடி வீரர் சேவாக்கும் கருத்து தெரிவித்திருந்தார்.

முன்னாள் கேப்டன் கங்குலி இந்த விவகாரம் குறித்துக் கூறியதாவது: இந்திய அணி நிர்வாகம், தோனியுடன் அமர்ந்து அணியில் அவருக்குண்டான பொறுப்புகள் குறித்து விவாதிக்கவேண்டும். டி20 கிரிக்கெட்டில் அவர் ஒரு பெரிய வீரர். ஏதாவது முடிவு எடுக்கும் முன்பு, அவர் தன்னை மீண்டும் நிரூபிக்க சரியான வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும் என்றார். 2019 உலகக்கோப்பை குறித்தும் அணி நிர்வாகம் யோசிக்கவேண்டும். வருங்காலத்தில் தோனியால் தன் ஆட்டத்தில் முன்னேற்றத்தைக் கொண்டுவரமுடியாவிட்டால் அணி நிர்வாகம் மாற்று ஏற்பாடுகளுக்கு ஆயத்தமாகவேண்டும்.

நான் பல ஆண்டுகளாகக் கூறிக்கொண்டிருக்கிறேன். தோனி, 4-ம் நிலையில் களமிறங்கவேண்டும். அப்போதுதான் அவர் முதலில் தாமதமாக ரன்கள் சேர்த்து பிறகு அதிரடியாக விளையாட பொருத்தமாக இருக்கும். தோனிக்கு ஆதரவாக கோலி பேசியிருப்பது முக்கியமான விஷயம். தோனி சரியாக விளையாடாத சமயத்தில் கோலி உதவியிருக்கிறார். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றும் விதமாக தோனி நிறைய ரன்கள் எடுக்க்கவேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், தோனிக்கு ஆதரவாக கோலி இவ்வாறு கருத்து தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: சிலர் தோனி குறித்து மட்டும் விமர்சித்து வருவது ஏன்? என்று எனக்குப் புரியவில்லை. பேட்ஸ்மேனாக நான் சோபிக்கவில்லை எனில் எந்த விமர்சனங்களும் எழுவதில்லை. ஒருவேளை நான் 35 வயதுக்குள் இருப்பதால் விமர்சனங்கள் எழாமல் இருக்கலாம். ஒவ்வோர் ஆட்டத்திலும் சிறப்பான பங்களிப்பையும், கடின உழைப்பையும் தோனி அளித்து வருகிறார். அணியில் தன்னுடைய பங்களிப்பு என்ன என்பது அவருக்குத் தெரியும். விமர்சிப்பவர்களுக்கு மிகவும் பொறுமை தேவை என்றார் கோலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com