தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா, பிரணாய் சாம்பியன்

தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சாய்னா நெவாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரணாயும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
தேசிய பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா, பிரணாய் சாம்பியன்

தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் சாய்னா நெவாலும், ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் பிரணாயும் சாம்பியன் பட்டம் வென்றனர்.
மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் 82-ஆவது தேசிய சீனியர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி புதன்கிழமையுடன் நிறைவடைந்தது. இதில் புதன்கிழமை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் உலகின் 11-ஆம் நிலை வீராங்கனையான சாய்னா, 21-17, 27-25 என்ற செட் கணக்கில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பி.வி.சிந்துவை வீழ்த்தினார். முன்னதாக, சாய்னா-சிந்து ஆட்டம் பரபரப்பாக நடைபெற்றது. இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியில் சாய்னா வென்றார்.
'இன்றைய ஆட்டத்தில் சிந்து அடித்த கடினமான ஷாட்களை சிறப்பாக எதிர்கொண்டேன். எனது ஆட்டம் எனக்கே ஆச்சரியமளிக்கும் வகையில் உள்ளது' என்றார் வெற்றிப்பூரிப்பில் இருந்த சாய்னா. 
இதில், சாய்னா 2007-ஆம் ஆண்டுக்குப் பிறகும், சிந்து 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகும் தேசிய பாட்மிண்டனில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
பிரணாய் வெற்றி: ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஸ்ரீகாந்த்தை 21-15, 16-21, 21-7 என்ற செட் கணக்கில் பிரணாய் வீழ்த்தினார்.
ஆடவர் இரட்டையர் பிரிவில், போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி, 15-21, 22-20, 25-23 என்ற செட் கணக்கில், போட்டித் தரவரிசையில் முதலிடம் வகித்த சாத்விக்-சிரக் ஷெட்டி ஜோடியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
இரட்டிப்பு மகிழ்ச்சியில் அஸ்வினி பொன்னப்பா: மகளிர் இரட்டையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் முதலிடம் வகித்த சிக்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, 21-14, 21-14 என்ற நேர் செட் கணக்கில், சன்யோகிதா கோர்படே-பிரஜக்தா சாவந்த் ஜோடியை இறுதி ஆட்டத்தில் வீழ்த்தியது.
கலப்பு இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில், சாத்விக் சாய் ராஜ்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, 21-9, 20-22, 21-17 என்ற செட் கணக்கில், உலக தரவரிசையில் 16-ஆவது இடத்தில் இருக்கும் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடியை வீழ்த்தியது.
தான் களம் கண்ட இரண்டு பிரிவிலும் சாம்பியன் பட்டம் வென்றதால் அஸ்வினி பொன்னப்பா இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com