துளிகள்...

துளிகள்...

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பாக இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகளுக்கென வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படுவார் என்று இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தெரிவித்துள்ளது.
சூதாட்ட விவகாரத்தில் தனக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு தடைக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷர்ஜீல் கான் செய்த மேல்முறையீட்டை, அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நிராகரித்துள்ளது.
சமூக வலைதளங்களை விடுத்து, திறந்தவெளி விளையாட்டுகளில் இளைஞர்கள் அதிகம் விளையாட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி அறிவுறுத்தியுள்ளார்.
ஜெர்மன் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் செளம்யஜித் கோஷ் பிரதான சுற்றுக்கு முன்னேற, சத்தியன் அந்தச் சுற்றை நெருங்கியுள்ளார். எனினும், சரத் கமல், ஹர்மீத் தேசாய் ஆகியோர் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் போன்ற அபாயகரமான பேட்ஸ்மேன்களுக்கு பந்துவீசும்போது, மாற்று திட்டம் ஒன்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். அவர் எத்தகைய பந்தையும் அடித்தாடக் கூடியவர்' என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராடு கூறினார்.
ஓர் அணியில் 6 பேர் கொண்டு விளையாடும் கால்பந்து போட்டி 
இந்தியாவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்று அப்போட்டி 
ஆலோசகரும், கால்பந்து வீரருமான பாய்சங் பூட்டியா கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com