இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: முதல் 2 போட்டிகளில் பாண்டியாவுக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
இந்திய டெஸ்ட் அணி அறிவிப்பு: முதல் 2 போட்டிகளில் பாண்டியாவுக்கு ஓய்வு

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில், முதல் இரண்டு போட்டிகளில் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
 கோலி தலைமையிலான இந்த அணியில் பாண்டியாவுக்கு பதிலான மாற்று வீரரை தேர்வுக் குழு குறிப்பிடவில்லை.
 இதுதொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 இந்திய அணி நிர்வாகத்துடனான கலந்தாலோசனைக்குப் பிறகு, இலங்கைக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஹார்திக் பாண்டியாவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்யப்பட்டது. அவருக்கான வேலைப் பளு அதிகரித்துள்ள நிலையில், அவருக்கு காயம் ஏற்படுவதை தடுக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
 பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமியில் குறிப்பிட்ட காலத்துக்கு பாண்டியா பயிற்சியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
 திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் பந்துவீசியபோது பாண்டியாவுக்கு கைகளில் காயம் ஏற்பட்டது. அப்போது வலியால் துடித்தபோதிலும், தொடர்ந்து ஓவர் வீசினார். அதன் காரணமாக அவருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதா என பிசிசிஐ தெளிவாகத் தெரிவிக்கவில்லை.
 பாண்டியா, ஜூன் மாதம் சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலிருந்து இதுவரை 3 டெஸ்ட், 22 ஒருநாள் ஆட்டங்கள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். கோலிக்கு அடுத்தபடியாக, அவர் அதிக போட்டிகளில் பங்கேற்று வந்துள்ளார்.
 இலங்கை அணி பெரும் பலம் வாய்ந்த அணியாக இல்லாத நிலையில், ஆல் ரவுண்டர்களின் தேவை ஏற்படாத காரணத்தால் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் போன்ற சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களின் துணையுடன் களம் காண இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
 அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), கே.எல்.ராகுல், முரளி விஜய், ஷிகர் தவன், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், இஷாந்த் சர்மா.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com