யு-17 கால்பந்து வீரர்களை ஊக்குவித்த பிரதமர் மோடி

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியில் பங்கேற்ற வீரர்களை நேரில் அழைத்து
யு-17 கால்பந்து வீரர்களை ஊக்குவித்த பிரதமர் மோடி

பதினேழு வயதுக்கு உள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணியில் பங்கேற்ற வீரர்களை நேரில் அழைத்து பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியதுடன், அவர்களை ஊக்குவிக்கும் சில அறிவுரைகளையும் வழங்கினார்.
 சவூதி அரேபியாவில் ஏஎஃப்சி யு-19 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று திரும்பிய கால்பந்து வீரர்களை தனது அலுவலகத்துக்கு வெள்ளிக்கிழமை வரவழைத்து பிரதமர் மோடி பாராட்டினார். அப்போது அவர் கூறியதாவது:
 அண்மையில் நடந்துமுடிந்த ஃபிஃபா யு-17 கால்பந்து போட்டியில் விளையாடிய உங்கள் (வீரர்கள்) அனைவரின் கண்களிலும் கால்பந்தில் சாதிக்க வேண்டும் என்ற கனவு சுடர்விட்டதைப் பார்த்தேன். அதன் காரணமாகவே தனிப்பட்ட முறையில் உங்களை சந்திக்க வேண்டும் என்று விரும்பினேன்.
 கால்பந்தாட்டங்களில் சிறப்பாக விளையாடியதால் உங்களைப் பற்றி ரசிகர்கள் அறிந்துகொள்ள தொடங்கிவிட்டனர்.
 எனவே, உங்களுடைய தோள்களில் மிகப் பெரிய பொறுப்பை சுமக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது. நீங்கள் அனைவரும் ஒன்றாக இருந்தால், இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளில் சிறந்த தொழில்முறை கால்பந்தாட்ட வீரர்களாக உருவெடுத்து, நமது நாட்டுக்கு பெறுமை சேர்ப்பீர்கள்.
 யு-17 உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியை எதிர்கால போட்டிகளுக்கான ஒரு பயிற்சியாக எடுத்துக் கொள்ளுங்கள்.
 கொலம்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் நமது வீரர் ஜிக்சன் சிங் அடித்த கோலானது, கொண்டாட்டத்துக்கான மிகப்பெரிய காரணமாக இருந்தது.
 விளையாட்டு இல்லாமல் வாழ்க்கை இல்லை. கால்பந்து என்பது நேர்த்தியான ஒரு விளையாட்டு. இதை மக்களிடன் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக நீங்கள் கொண்டு சேர்ப்பீர்கள் என்று நம்புகிறேன் என்று மோடி தெரிவித்தார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com