அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு: விமர்சனங்களுக்கு 'கேப்டன் கூல்' எதிர்வினை! 

நம்மைப் பற்றி அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு; அவை மதிக்கப்பட வேண்டும் என்று தனது விளையாட்டுத் திறன்  மீதான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி... 
அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு: விமர்சனங்களுக்கு 'கேப்டன் கூல்' எதிர்வினை! 

துபை: நம்மைப் பற்றி அனைவருக்கும் கருத்துக் கூற உரிமை உண்டு; அவை மதிக்கப்பட வேண்டும் என்று தனது விளையாட்டுத் திறன்  மீதான விமர்சனங்களுக்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி பதில் கூறியுள்ளார்.   

சமீபத்தில் முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தோணி சரியாக விளையாடவில்லை என்றும்,  இளையவர்களுக்கு வழி விட்டு அவர் ஓய்வு பெற வேண்டும் என்று விமர்சனங்கள் எழுந்தன. அஜித் அகார்க்கர் உள்ளிட்டோர் அவரது பேட்டிங் குறித்து கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்.

இந்நிலையில் துபையில் தனது குளோபல் கிரிக்கெட் அகாடமியைத் தோணி நேற்று திறந்து வைத்தார். அப்பொழுது அவரிடம் இது குறித்து கேட்கப்பட்ட பொழுது, அவர் கூறிய பதிலாவது:

இங்கு அனைவருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது, அது மதிக்கப்பட வேண்டியது அவசியம். என்னைப் பொறுத்த வரை இந்திய கிரிக்கெட் அணியின் ஒரு அங்கமாக இருப்பதே மிகப்பெரிய உத்வேகம். பலர் மிகத்தொலைவு வரை இந்த விளையாட்டில் சென்றுள்ளனர். அதற்கு காரணம் அவர்களுக்கு இந்திய அணி மீதும் கிரிக்கெட் மீதும் உள்ள ஆர்வம்தான். அனைவரும் நாட்டுக்கு ஆடிவிட முடியாது. பயிற்சியாளர்கள் இதனைத்தான் கண்டுபிடிக்க வேண்டும். .

எனது கிரிக்கெட் அகாதமியைப் பொறுத்தவரை, நான் எப்போதுமே முடிவுகளை விட வழிமுறைகளையே பெரிதும் நம்புபவன். நான் ஒருபோதும் முடிவுகள் பற்றிக் கவலைப்பட்டதில்லை. நான் எது சரி என்று படுகிறதோ அதைத்தான் இதுவரை செய்து வந்துள்ளேன்.

அந்தச் சூழ்நிலையில் எத்தனை பந்துகளில் எத்தனை ரன்கள் தேவையாக இருந்தாலும்  எது சரியானதோ அதைத்தான் செய்வேன். நான் வழிமுறைகளிலேயே ஆழ்ந்து விடுபவன். முடிவுகள் பற்றிய சுமையை நான் சிந்திப்பதில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com