சீன ஓபன் பாட்மிண்டன் இன்று தொடக்கம்: சாய்னா, சிந்து, பிரணாய் பங்கேற்கின்றனர்

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் சூப்பர்சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சீன ஓபன் பாட்மிண்டன் இன்று தொடக்கம்: சாய்னா, சிந்து, பிரணாய் பங்கேற்கின்றனர்

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கும் சூப்பர்சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், பி.வி.சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
 இப்போட்டியில் சிறப்பாக செயல்பட்டு, துபை சூப்பர் சீரிஸ் ஃபைனல்ஸ் போட்டிக்கு தகுதிபெற சாய்னா, பிரணாய் தீவிரமாக உள்ளனர். இவர்கள் இருவருமே சர்வதேச ஒற்றையர் தரவரிசையில் 11-ஆவது இடத்தில் உள்ளனர்.
 இதில், சமீபத்தில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற சாய்னா, முதல் சுற்றில் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்கை சந்திக்க உள்ளார். சிந்து, ஜப்பானின் சயாகா சாடோவை எதிர்கொள்கிறார்.
 சிந்து மூன்றாவது சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொள்ளும் வாய்ப்புள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் கிளாஸ்கோ உலக சாம்பியன்ஷிப் போட்டி இறுதிச்சுற்றில் நஜோமியிடம் சிந்து தோல்வி கண்டிருந்தார்.
 இதனிடையே, ஸ்ரீகாந்தை வீழ்த்தி தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் தனது முதல் பட்டத்தை வென்ற ஹெச்.எஸ்.பிரணாய், இந்தப் போட்டியின் முதல் சுற்றில் தகுதிச்சுற்று வீரரை சந்திக்கிறார். உடற்தகுதி பிரச்னை காரணமாக கடந்த இரு சூப்பர் சீரிஸ் போட்டிகளை தவறவிட்ட செüரவ் வர்மா, இப்போட்டியில் களம் திரும்புகிறார். முதல் சுற்றில் அவர் பிரான்ஸின் பிரைஸ் லெவர்டெûஸ சந்திக்கிறார்.
 கலப்பு இரட்டையர் பிரிவில் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி, போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் சீனாவின் ùஸங் சிவெய்-ஹுவாங் யாகியோங் ஜோடியுடன் முதல் சுற்றில் மோதுகிறது. ஆடவர் இரட்டையர் ஜோடியான மானு அத்ரி-சுமித் ரெட்டி, முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்தோனேஷியாவின் மார்கஸ் ஃபெர்னால்டி கிடியான்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ இணையை எதிர்கொள்கிறது.
 மகளிர் இரட்டையரில் அஸ்வினி பொன்னப்பா-சிக்கி ரெட்டி இணை, தென் கொரியாவின் ஹா நா பேக்-சே யூ ஜங் ஜோடியுடன் முதல் சுற்றில் மோதுகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை நடைபெறும் தகுதிச்சுற்றுகளில், கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-அஸ்வினி ஜோடி சீன தைபேவின் லீ ஜெ ஹுய்-வூ டி ஜங் ஜோடியுடன் மோதுகிறது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் பி.காஷ்யப் முதல் ஆட்டத்தில் சீனாவின் குவோ காயை சந்திக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com