முதல் டெஸ்ட்: 52 ரன்களில் வீழ்ந்தார் புஜாரா! இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி!

முதல் டெஸ்ட்: 52 ரன்களில் வீழ்ந்தார் புஜாரா! இந்திய அணிக்கு மேலும் நெருக்கடி!

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்...

இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன் புஜாரா 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணிக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாளும் மழையால் பாதிக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளை வரை நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. முதல் நாள் பந்துவீச்சில் இலங்கையின் சுரங்கா லக்மல் ஆதிக்கம் செலுத்திய நிலையில், 2-ஆவது நாளில் டாசன் சனகா 2 விக்கெட்டுகள் வீழ்த்தி இந்திய அணியை கட்டுப்படுத்தினார்.

2-ம் நாளிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்ததை அடுத்து ஆட்டம் முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டது. அப்போது இந்தியா 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்திருந்தது. புஜாரா 9 பவுண்டரிகள் உள்பட 47, ரித்திமான் சாஹா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். 

இன்று ஆட்டம் தொடங்கியபோது ஹெராத் பந்தில் பவுண்டரி அடித்து 108 பந்துகளில் அரை சதத்தை எட்டினார். ஆனால் கேமேஜின் அற்புதமான பந்தில் போல்ட் ஆகி 52 ரன்களுடன் வெளியேறினார் புஜாரா. 

இதன்பிறகு களமிறங்கிய ஜடேஜா ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடினார். இவருக்கு இணையாக சாஹாவும் நிறைய பவுண்டரிகளை அடித்தார். இதனால் இந்தக் கூட்டணி பத்து ஓவர்களில் 42 ரன்கள் எடுத்தது. 

48-வது ஓவரின் முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்துள்ளது. சாஹா 25, ஜடேஜா 20 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com