சீன ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து அதிர்ச்சி தோல்வி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தனது காலிறுதிச்சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
சீன ஓபன் பாட்மிண்டன்: காலிறுதியில் சிந்து அதிர்ச்சி தோல்வி

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் பி.வி.சிந்து தனது காலிறுதிச்சுற்றில் அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
முன்னதாக நடைபெற்ற ஆட்டத்தில், சீனாவின் காவ் ஃபாங்ஜியை எதிர்கொண்ட சிந்து அதில் 11-21, 10-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். தொடக்கத்தில், 2-0 என்ற செட் கணக்கில் சிந்து முன்னிலை வகித்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காவ் ஃபாங்ஜி அந்த செட்டை தன்வசமாக்கினார். இதனால், 2-ஆவது செட் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. எனினும், 10-21 என்ற கணக்கில் அந்த செட்டையும் சிந்து இழந்தார்.
இப்போட்டியில் பங்கேற்றிருந்த இதர இந்தியர்களான சாய்னா நெவால், ஹெச்.எஸ். பிரணாய் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி அடைந்து ஏற்கெனவே போட்டியிலிருந்து வெளியேறினர். இந்நிலையில், கடைசி நம்பிக்கையான பி.வி.சிந்துவும் அதிர்ச்சி தோல்வி அடைந்து போட்டியிலிருந்து வெளியேறியுள்ளார்.
டென்மார்க் ஓபன், ஃப்ரெஞ்ச் ஓபன், நாகபுரியில் அண்மையில் நடந்துமுடிந்த தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டிகள் என கடந்த 3 வாரங்களாக சிந்து ஓய்வின்றி தொடர்ந்து பங்கேற்று வருகிறார். அடுத்த வாரம் தொடங்க உள்ள ஹாங் காங் ஓபனிலும் அவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com