தொடங்கியது ஐஎஸ்எல்: முதல் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் 4-ஆவது சீசன் கேரள மாநிலம் கொச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஐஎஸ்எல் தொடக்க விழாவில் சச்சின், சல்மான் கான், நீதா அம்பானி, கத்ரினா கைஃப், மம்மூட்டி
ஐஎஸ்எல் தொடக்க விழாவில் சச்சின், சல்மான் கான், நீதா அம்பானி, கத்ரினா கைஃப், மம்மூட்டி

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியின் 4-ஆவது சீசன் கேரள மாநிலம் கொச்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
இந்த சீசனின் முதல் ஆட்டமான அட்லெடிகோ டி கொல்கத்தா-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் இடையேயான ஆட்டம் கோல்கள் இன்றி டிராவில் முடிந்தது.
முன்னதாக, கொச்சி ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சீசனின் தொடக்க விழா நிகழ்ச்சியை பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், கேரள பிளாஸ்டர்ஸ் அணி உரிமையாளர்களில் ஒருவருமான சச்சின் டெண்டுல்கர், ஐஎம்ஜி ரிலையன்ஸ் உரிமையாளர் நீதா அம்பானி, மலையாள நடிகர் மம்மூட்டி ஆகியோர் கலந்துகொண்டனர். முன்னதாக, பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப்-சல்மான்கானின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து கொல்கத்தா-கேரளா அணிகள் இடையேயான ஆட்டம் தொடங்கியது. இரு அணிகளுக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுமே கடுமையாக போராடியபோதும் எந்த அணிக்கும் கோல் வாய்ப்பு கிடைக்கவில்லை. 71-ஆவது நிமிடத்தில் கேரள வீரர் ஜோஸ் பிராங்கோவின் கோல் முயற்சி, கோல் கம்பத்தில் பட்டு வீணானது. ஆட்டத்தின் 74-ஆவது நிமிடத்தில் கொல்கத்தா அணிக்கு கிடைத்த கோல் வாய்ப்பை கேரள கோல்கீப்பர் பால் ரசுப்கா அற்புதமாக தடுத்தார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இதே நிலை நீடிக்க, சீசனின் முதல் ஆட்டம் கோல்கள் இன்றி சமனில் முடிந்தது.
இன்றைய ஆட்டம்
நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி-
ஜாம்ஷெட்பூர் எஃப்சி
நேரம்: இரவு 8 மணி, இடம்: குவாஹாட்டி
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com