ஹாக்கி உலக லீக் ஃபைனல்: அணியிலிருந்து சர்தார் சிங் நீக்கம்

ஹாக்கி உலக லீக் ஃபைனல் போட்டியில் விளையாடுவதற்காக, 18 பேர் கொண்ட இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
ஹாக்கி உலக லீக் ஃபைனல்: அணியிலிருந்து சர்தார் சிங் நீக்கம்

ஹாக்கி உலக லீக் ஃபைனல் போட்டியில் விளையாடுவதற்காக, 18 பேர் கொண்ட இந்திய அணி வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
மன்பிரீத் சிங் தலைமையிலான இந்த அணியிலிருந்து மூத்த வீரரான சர்தார் சிங் நீக்கப்பட்டுள்ளார். மாறாக, காயத்திலிருந்து மீண்ட ரூபிந்தர் பால் சிங், வீரேந்திர லக்ரா ஆகியோர் அணிக்குத் திரும்பியுள்ளனர்.
ஆசிய கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்திருந்த சர்தார் சிங், அந்தப் போட்டியில் தனது நடுகள பொறுப்பை, கேப்டன் மன்பிரீத்துக்காக விட்டுக் கொடுத்து, தடுப்பாட்டத்தில் ஈடுபட்டார். இதனிடையே, அணியின் புதிய பயிற்சியாளர் ஜோர்டு மாரிஜ்னேவின் திட்டங்களுக்கு ஒத்துழைக்காத நிலையில் சர்தார் அணியில் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ரூபிந்தர் மற்றும் வீரேந்திரா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளது அணிக்கான பலமாக உள்ளது. தொடைப் பகுதி காயம் காரணமாக அவதிப்பட்டுவந்த ரூபிந்தர், கடைசியாக ஐரோப்பிய சுற்றுப் பயணத்தின்போது இந்திய அணியில் இடம்பிடித்திருந்தார். முழங்கால் காயம் காரணமாக ஓய்வில் இருந்த வீரேந்திர லக்ரா, கடந்த ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி மற்றும் டிசம்பரில் நடைபெற்ற 4 நாடுகள் ஹாக்கி போட்டியில் விளையாடியிருந்தார்.
இதனிடையே, சிங்லென்சனா சிங் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் உடற்தகுதி பெற வேண்டியுள்ளதால், ஆகாஷ் சிக்தே அல்லது சூரஜ் கர்கேரா ஆகிய இருவரில் ஒருவர் அப்பணியில் ஈடுபட உள்ளனர். ஜூனியர் உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட ஹர்மன்பிரீத் சிங், வருண் குமார், திப்சன் திர்கி ஆகியோரும் அணியில் உள்ளனர்.
இவர்களுடன் ஒடிஸா வீரர் அமித் ரோஹிதாஸ் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். ஹாக்கி உலக லீக் ஃபைனல் போட்டி ஒடிஸா மாநிலம் புவனேசுவரத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
அணி விவரம்
கோல்கீப்பர்கள்: ஆகாஷ் சிக்தே, சூரஜ் கர்கேரா
பின்கள வீரர்கள்: ஹர்மன்பிரீத் சிங், அமித் ரோஹிதாஸ், திப்சன் திர்கி, வருண் குமார், ரூபிந்தர் பால் சிங், வீரேந்திர லக்ரா.
நடுகள வீரர்கள்: மன்பிரீத் சிங் (கேப்டன்), சிங்லென்சனா சிங், உத்தப்பா, சுமித், கோதாஜித் சிங்.
முன்கள வீரர்கள்: எஸ்.வி.சுனில், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், லலித் குமார் உபாத்யாய், குர்ஜந்த் சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com