ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் கோஃபின்-டிமிட்ரோவ் பலப்பரீட்சை

லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின்-பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் 
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ்: இறுதிச்சுற்றில் கோஃபின்-டிமிட்ரோவ் பலப்பரீட்சை

லண்டனில் நடைபெற்று வரும் ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் இறுதிச்சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின்-பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற 2-ஆவது அரையிறுதியில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை எதிர்கொண்ட டிமிட்ரோவ் அதில் 4}6, 6}0, 6}3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 
வெற்றிக்குப் பிறகு பேசிய டிமிட்ரோவ் கூறுகையில், "மிகுந்த ஒருங்கிணைப்பாக ஆடினேன். எந்தவொரு எதிர்மறையான சிந்தனைகளும் எனக்குள் எழாமல் பார்த்துக் கொண்டேன். இது, இந்த சீசனின் கடைசி போட்டியின் இறுதிச்சுற்று என்பதால் கூடுதல் பரபரப்புடன் இருக்கிறது' என்றார்.
டிமிட்ரோவுடன் இறுதிச்சுற்றில் மோதும் கோஃபின், தனது அரையிறுதியில் ஃபெடரரை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. அவர் ரவுண்ட் ராபின் முதல் சுற்றில் நடாலை வெளியேற்றியிருந்ததும் நினைவுகூரத்தக்கது. நட்சத்திர வீரர்களான ஸ்பெயினின் ரஃபேல் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் ஆகியோரை ஒரே போட்டியில் வீழ்த்திய 6}ஆவது வீரர் என்ற பெருமையை கோஃபின் தற்போது பெற்றுள்ளார்.
இருப்பினும், முன்னதாக நடைபெற்ற ரவுண்டர் ராபின் சுற்று ஒன்றில் கோஃபினை 6}0, 6}2 என்ற செட் கணக்கில் டிமிட்ரோவ் வீழ்த்தியிருக்கிறார். எனவே, அதற்கு தக்க பதிலடி கொடுக்க கோஃபின் காத்திருப்பார் என்பதால், இருவருக்கு இடையேயான இந்த இறுதிச்சுற்று விறு விறுப்பானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com