ஒரு நாள் ஆட்டம்: தொடக்க நேரம் மாற்றம்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களின் தொடக்க நேரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மாற்றியமைத்துள்ளது.

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களின் தொடக்க நேரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மாற்றியமைத்துள்ளது.
 தலா 3 டெஸ்ட், 3 ஒரு நாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை, இந்தியா வந்துள்ளது. இதில், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் முதல் 2 தினங்களும் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டன. வட இந்தியாவில் டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவு பரவலாக இருக்கும். அவ்வப்போது மழை பொழியவும் வாய்ப்புள்ளது.
 இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் டிசம்பர் 10-ஆம் தேதி ஹிமாசலப் பிரதேச மாநிலம், தர்மசாலாவிலும், 2-ஆவது ஆட்டம் 13-ஆம் தேதி பஞ்சாப் மாநிலம், மொஹாலி நகரிலும் நடைபெறவுள்ளன. எனவே, பருவநிலையைக் கவனத்தில் கொண்டு அந்த இரண்டு ஒரு நாள் ஆட்டங்களை மட்டும் நண்பகல் 1.30 மணிக்கு பதிலாக 11.30 மணிக்கு தொடங்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது.
 இதுகுறித்து பிசிசிஐ தாற்காலிகச் செயலர் அமிதாப் சௌதரி, ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
 ஹிமாசலப் பிரதேச கிரிக்கெட் சங்கம், பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் ஆகியவற்றுடன் ஆலோசனை நடத்திய பிறகு, ஆட்டங்கள் தொடங்கும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள 3-ஆவது ஒரு நாள் ஆட்டம் வழக்கம்போலவே நண்பகல் 1.30 மணிக்குத் தொடங்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com