ரஞ்சி கிரிக்கெட்: தமிழகம் 326

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் தமிழகம் முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 326 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இந்தூரில் வெள்ளிக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மத்தியப் பிரதேசம் 90.1 ஓவர்களில் 264 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அங்கித் சர்மா அதிகபட்சமாக 77 ரன்கள் எடுத்தார். தமிழகத்தின் விக்னேஷ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தமிழக அணியில் ஜெகதீசன் 101 ரன்கள் எடுக்க, மகேஷ் 103 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திரஜித் 25, முகமது 43, சாய் கிஷோர் 14 ரன்களுடனும், இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்திலும் வீழ்ந்தனர். மத்திய பிரதேசத்தின் பாண்டே, புனீத் தலா 3 விக்கெட் எடுத்தனர்.
பின்னர் 2}ஆவது இன்னிங்ஸை தொடங்கிய மத்திய பிரதேசம், 3}ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 40 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்துள்ளது. பட்டிதார் 81, சர்மா 41 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com