ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ்: முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றார் டிமிட்ரோவ்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ்: முதல் கிராண்ட்ஸ்லாம் வென்றார் டிமிட்ரோவ்

ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்றார். இது அவரது முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.
 அத்துடன், முதல் முறையாக இந்தப் போட்டியில் பங்கேற்ற நிலையில் டிமிட்ரோவ் பட்டம் வென்றுள்ளார். முதல் முறை பங்கேற்பாளர் இப்போட்டியில் பட்டம் வெல்வது, 1998-ஆம் ஆண்டுக்குப் பிறகு இது முதல் முறையாகும்.
 போட்டித் தரவரிசையில் 6-ஆவது இடத்தில் இருந்த டிமிட்ரோவ், இறுதிச்சுற்றில் பெல்ஜியத்தின் டேவிட் கோஃபினை 7-5, 4-6, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். முன்னதாக, ரவுண்ட் ராபின் சுற்றிலும் அவர் டேவிட்டை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 டிமிட்ரோவ் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் முதல் முறையாக அரையிறுதி மற்றும் இறுதிச்சுற்றுக்கு முன்னேறி பட்டம் வென்றுள்ளார். முன்னதாக, 2014-ஆம் ஆண்டு விம்பிள்டன், இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டிகளில் காலிறுதி வரை முன்னேறியிருந்ததே அவரது அதிகபட்சமாக இருந்தது.
 வெற்றிக்குப் பிறகு பேசிய டிமிட்ரோவ், "கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வது எனது கனவுகளில் ஒன்றாகும். அதை தற்போது எட்டியதால் அளவற்ற மகிழ்ச்சியில் வார்த்தைகள் வரவில்லை. என்னால் இதைவிடவும் சிறப்பாகச் செயல்பட முடியும். இந்த ஆண்டில் நான் சிறப்பாக செயல்பட்ட இடங்கள் எவை, நான் மேம்படுத்த வேண்டிய இடங்கள் எவை என்பது குறித்து எனது அணியினருடன் ஆலோசிக்க உள்ளேன்' என்றார்.
 இந்த ஆண்டு இப்போட்டியில் பிரிட்டனின் ஆன்டி முர்ரே, செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகிய முன்னணி வீரர்கள் பங்கேற்காத நிலையில், உலகின் முதல் நிலை வீரரான ஸ்பெயினின் நடால், ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் மட்டும் பங்கேற்றனர். இந்தப் போட்டியில் இதுவரை பட்டம் வெல்லாத நடால், முதல் ரவுண்ட் ராபின் சுற்றில் தோற்றார்.
 அத்துடன், காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில், முதல் சுற்றில் நடாலை வீழ்த்திய டேவிட் கோஃபின் அரையிறுதியில் ஃபெடரரை வெளியேற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
தரவரிசையில் முன்னேற்றம்
 ஏடிபி ஃபைனல்ஸ் பட்டம் வென்ற கிரிகோர் டிமிட்ரோவ், சர்வதேச தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி முதல் முறையாக 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளார்.
 இறுதிச்சுற்றில் அவரிடம் வீழ்ந்த பெல்ஜியத்தின் டேவிட் கோஃபின், ஓரிடம் முன்னேறி 7-ஆவது இடத்தை அடைந்துள்ளார். நடால் முதலிடத்தில் தொடருகிறார்.
கான்டினென்-ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன்


 ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் ஃபின்லாந்தின் ஹென்றி கான்டினென்-ஆஸ்திரேலியாவின் ஜான் பியர்ஸ் ஜோடி சாம்பியன் ஆனது.
 முன்னதாக நடைபெற்ற இறுதிச்சுற்றில் அந்த ஜோடி, போலந்தின் லூகாஸ் குபோட்-பிரேசிலின் மார்செலோ மெலோ இணையை 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வென்றது. கான்டினென்-பியர்ஸ் ஜோடி இதுவரை 4 முறை லூகாஸ்-மார்செலோ ஜோடியை சந்தித்துள்ள நிலையில், தனது 3-ஆவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com