செய்திகள் சில வரிகளில்...

இந்தியாவின் "லூகர்' பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான சிவா கேசவன், அடுத்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளார்.

இந்தியாவின் "லூகர்' பனிச்சறுக்கு விளையாட்டு வீரரான சிவா கேசவன், அடுத்த ஆண்டு தென் கொரியாவில் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதிபெற்றுள்ளார்.
 ஆஷஸ் டெஸ்ட் தொடரின்போது விரைந்து ஓடி ரன் எடுப்பதற்காக, "மின்னல் மனிதன்' என அழைக்கப்படும் ஜமைக்கா தடகள வீரர் உசேன் போல்ட்டிடம் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் நுணுக்கங்கள் கேட்டறிந்துள்ளனர்.
 சுமார் 20 ஆண்டுகளாக அகில இந்திய கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இருந்த பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஸி (72), வயது மூப்பு காரணமாக திங்கள்கிழமை காலமானார்.
 தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் மகளிருக்கான டபுள் டிராப் பிரிவில் ஷ்ரேயாஸி சிங் தங்கம் வென்றார்.
 மகளிருக்கான மும்பை ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் கர்மான் தன்டி கெüர், ஸீல் தேசாய் ஆகியோர் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.
 ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடரின் 5-ஆவது ஆட்டம், ஆஸ்திரேலியாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நியூ பெர்த் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
 முன்னாள் விம்பிள்டன் டென்னிஸ் சாம்பியனும், செக். குடியரசைச் சேர்ந்தவருமான ஜானா நோவேடா (49) புற்றுநோய் காரணமாக மரணமடைந்தார்.
 பெங்களூரு ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் பிரஜனேஷ் கன்னேஸ்வரன் தனது முதல் சுற்றில், அமெரிக்காவின் எவான் கிங்கை 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தினார்.
 இத்தாலி கால்பந்து அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதிபெறத் தவறியதை அடுத்து, அந்நாட்டின் கால்பந்து சம்மேளனத் தலைவர் கார்லோ டவெசியோ பதவி விலகியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com