இந்தூர் மகளிர் டென்னிஸ்: நவ. 25-இல் தொடக்கம்

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) சார்பில், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வரும் சனிக்கிழமை (நவ.25) மகளிர் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது.

சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) சார்பில், மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் வரும் சனிக்கிழமை (நவ.25) மகளிர் டென்னிஸ் போட்டி தொடங்குகிறது.
ரூ.9.73 லட்சம் பரிசுத் தொகை கொண்ட இந்தூர் ஓபன் 8 தினங்கள் நடைபெறும். இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலும் இருந்து 100-க்கும் மேற்பட்ட சீனியர் டென்னிஸ் வீராங்கனைகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து மத்தியப் பிரதேச டென்னிஸ் சங்கத்தின் செயலர் அனில் துபர், இந்தூரில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இதுவரை, சீனா, போஸ்னியா, ஹர்செகோவினா, சீன தைபே, உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், ரஷியா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஹாங் காங், கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்பதற்கு விண்ணப்பித்துள்ளனர்.
நமது நாட்டிலிருந்து 30-க்கும் மேற்பட்ட டென்னிஸ் வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 25, 26-ஆகிய இரு தினங்களும் தகுதிச்சுற்று நடைபெறும் என்று அனில் துபர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com