இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் ஆட்டத்தில், இந்திய அணியில் தமிழக வீரரான ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (26) சேர்க்கப்பட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: தமிழக வீரர் விஜய் சங்கர் தேர்வு

இலங்கைக்கு எதிரான 2 டெஸ்ட் ஆட்டத்தில், இந்திய அணியில் தமிழக வீரரான ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர் (26) சேர்க்கப்பட்டுள்ளார்.
ரஞ்சி கிரிக்கெட்டில் தற்போது விளையாடிவரும் விஜய் சங்கர், இந்திய அணியில் சேர்க்கப்பட்டதை அடுத்து மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.
நெல்லையைச் சேர்ந்தவரான இவர், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஹைதராபாத் சன் ரைஸஸ் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார்.
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் செய்தியாளர்களிடம் அவர் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய நீண்ட நாள் கனவு பலித்துவிட்டது. இதற்காக நான் மிகக் கடுமையாக உழைத்திருக்கிறேன்.
இந்திய 'ஏ' அணியில் விளையாடியது, ஆல்-ரவுண்டராக உருவெடுக்க மிகவும் உதவியாக இருந்தது.
எந்த இக்கட்டான சூழ்நிலையையும் எதிர்கொண்டு விளையாடுவேன். ரஞ்சி கிரிக்கெட்டில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினேன். எனக்கு அதிக ஓவர்களை சிறப்பாக வீச முடியும். பேட்டிங்கிலும் நல்ல பயிற்சி பெற்றிருக்கிறேன் என்றார் விஜய் சங்கர்.
குடும்பத்தினர் மகிழ்ச்சி: இந்திய அணிக்கு விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டதை அடுத்து, அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து அவரது சகோதரர் அஜய் கூறுகையில், 'விஜய் சங்கரின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. இந்திய அணிக்காக அவர் விளையாடுவதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்' என்றார்.
வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமாருக்கு வரும் 23-ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. இந்தச் சூழலில் அவருக்கு மாற்றாக விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிர மாநிலம், நாகபுரியில் வரும் வெள்ளிக்கிழமை இலங்கை அணிக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் ஆட்டம் நடைபெற உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com