உலக மகளிர் இளையோர் குத்துச்சண்டை: காலிறுதியில் 5 இந்திய வீராங்கனைகள்

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் நடைபெற்றுவரும் 5-ஆவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை
உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை 64 எடைப்பிரிவு தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அன்குஷிதா போரோ
உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை 64 எடைப்பிரிவு தகுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அன்குஷிதா போரோ

அஸ்ஸாம் மாநிலம், குவாஹாட்டி நகரில் நடைபெற்றுவரும் 5-ஆவது உலக மகளிர் இளையோர் குத்துச் சண்டை போட்டியில், இந்திய குத்துச்சண்டை வீராங்கனைகள் அன்குஷிதா போரோ, சசி சோப்ரா உள்பட 5 பேர் முறையே தங்களது எடைப்பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினர்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில், 64 கிலோ எடைப்பிரிவில் துருக்கி வீராங்கனை கக்லா அலூச்ûசை அன்குஷிதா போரோ எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆக்ரோஷம் காட்டிய போரோ, கக்லாவை வீழ்த்தினார்.
51 கிலோ எடைப்பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில், உக்ரைன் வீராங்கனை அனஸ்தாசியா லிசின்ஸ்காவை ஜோதி குலியா வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், 57 கிலோ எடைப்பிரிவில் சசி சோப்ராவும் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
கோல்டன்-க்ளோவ் போட்டியில் தங்கம் வென்ற நீது, 48 கிலோ எடைப் பிரிவிலும், 54 எடைப்பிரிவில் சாக்ஷி சௌதரியும் காலிறுதிக்கு முன்னேறினார்.
இந்தப் போட்டியில் இந்தியாவுக்கு எப்படியும் 2 பதக்கங்கள் உறுதி ஆகியுள்ளன. அதாவது, இந்தப் போட்டியில் நேஹா யாதவ் (+81 கிலோ எடைப் பிரிவு), அனுபமா (81 கிலோ) ஆகிய இருவரும், அந்தப் பிரிவில் அதிக போட்டியாளர்கள் பங்கேற்காத காரணத்தால் நேரடியாக அரையிறுதிக்கு முன்னேறினர்.
அரையிறுதிக்கு முன்னேறியதன் மூலம், 2 பதக்கங்கள் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
உலகம் முழுவதிலும் 38 நாடுகளிலிருந்து 150 வீராங்கனைகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளனர்.

51 கிலோ எடைப் பிரிவில் வெற்றி பெற்ற ஜோதி குலியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com