ஹாங் காங் ஓபன்: பிரதான சுற்றில் காஷ்யப்

ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
ஹாங் காங் ஓபன்: பிரதான சுற்றில் காஷ்யப்

ஹாங்காங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் காஷ்யப் பிரதான சுற்றுக்கு முன்னேறினார்.
காங் காங்கின் கோவ்லூன் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தொடக்க சுற்றில் காஷ்யப் 21-12, 21-10 என்ற செட் கணக்கில், சீன தைபேவின் கான் சாவ் யுவை வீழ்த்தினார். அதைத் தொடர்ந்து, காங் காங் வீரர் லீ செக் யூவை எதிர்கொண்ட காஷ்யப், அவரை 21-13, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி பிரதானச் சுற்றுக்கு முன்னேறினார்.
அந்தச் சுற்றில் தென் கொரிய வீரர் லீ டாங் குன்னை அவர் எதிர்கொள்கிறார். ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் அர்ஜுன்-ராமச்சந்திரன் ஸ்லோக் ஜோடி, 19-21, 17-21 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் கிம் வோன் ஹோ-சீங் ஜா சீ ஜோடியிடம் தோல்வி அடைந்து வெளியேறினார்.
கலப்பு இரட்டையர் பிரிவில், தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி 18-21, 11-21 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ஹஃபீஸ் ஃபைஸல்-குளோரியா எமானுவேல் வித்ஜஜா ஜோடியிடம் வீழ்ந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com