ஃபிஃபா தரவரிசை 105-இல் நீடிக்கும் இந்தியா

சர்வதேச கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 105-ஆவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

சர்வதேச கால்பந்து அணிகளுக்கான ஃபிஃபா தரவரிசையில் இந்திய கால்பந்து அணி 105-ஆவது இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.
ஏஎஃப்சி ஆசிய கோப்பை தகுதிச்சுற்றில் மியான்மருடனான ஆட்டத்தை 2-2 என சமன் செய்துள்ள நிலையில், வியாழக்கிழமை வெளியான தரவரிசையில் இந்தியா முன்பு இருந்த இடத்திலேயே நீடிக்கிறது. ஃபிஃபா தரவரிசையில், ஆசிய கால்பந்து சம்மேளன நாடுகளின் வரிசையில் இந்தியா 15-ஆவது இடத்தில் உள்ளது. அதையடுத்து ஜோர்டான், வடகொரியா, பஹ்ரைன் அணிகள் உள்ளன. ஆசிய நாடுகளின் வரிசையில் ஈரானும், சர்வதேச தரவரிசையில் ஜெர்மனியும் முதலிடத்தில் உள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com