'கேப்டன்' விராட் கோலி இரட்டைச் சதம்

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி இரட்டைச்சதம் விளாசி புது சாதனைப் படைத்தார்.
'கேப்டன்' விராட் கோலி இரட்டைச் சதம்

இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இரட்டைச் சதம் விளாசினார். 259 பந்துகளில் 15 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 200 ரன்கள் விளாசினார்.

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது 5-ஆவது இரட்டைச் சதத்தை பதிவு செய்தார். இலங்கைக்கு எதிராக இது அவரது முதல் இரட்டைச் சதமாகும்.

ரோஹித் ஷர்மா 79 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தியா 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 572 ரன்களைக் குவித்துள்ளது. இதனால் இலங்கையை விட 363 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

முன்னதாக, 4-ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய கோலி, டெஸ்ட் அரங்கில் 19-ஆவது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் நடப்பு ஆண்டில் மட்டும் 10 சதங்களை விளாசியுள்ளார். 

அதுபோல ஒரு வருடத்தில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார். 2005, 2006-ம் ஆண்டுகளில் ரிக்கி பாண்டிங் மற்றும் 2005-ல் தென் ஆப்பிரிக்க கேப்டன் க்ரீம் ஸ்மித் ஆகியோர் 9 சதங்களை விளாசியுள்ளனர்.

டெஸ்ட் அரங்கில் இதுவரை 10 சதங்களுக்கு மேல் பதிவு செய்த கேப்டன்களின் வரிசையில் தான் அடித்த அரைசதங்களில் 75 சதவீதத்துக்கும் மேல் சதமாக மாற்றிய ஒரே கேப்டன் விராட் கோலி மட்டும்தான்.

இதுவரை கேப்டனாக விராட் கோலி 16 முறை அடித்த அரைசதங்களில் 12 சதங்களாக மாறியுள்ளது. இதில் ஆஸ்திரேலியாவின் டான் பிராட்மேன் சாதனையும் முறியடிக்கப்பட்து. அவர், கேப்டனாக அடித்த 21 அரைசதங்களில் 14 மட்டுமே சதங்களாக மாற்றியுள்ளார். 

மேலும், இந்திய கேப்டன்களில் அதிக சதம் விளாசியவர்கள் பட்டியலிலும் முதலிடம் பிடித்தார். இதில் 12 சதங்களுடன் விராட் கோலி முதலிடத்திலும், சுனில் கவாஸ்கர் 11 சதங்களுடன் 2-ஆவது இடத்திலும் உள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com