துளிகள்...

துளிகள்...

*  தில்லியில் நடைபெறும் தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் சூரஜ் பிரபோத், பவா ஹாத்தின் ஆகியோர் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.
*  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி கேப்டன் மிதாலி ராஜ் தனது சுயசரிதை புத்தகத்தை எழுதுகிறார். இப்புத்தகம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது.
*  ஆஸ்திரேலிய ஹாக்கி லீக் போட்டியின் ஆடவர் பிரிவில் இந்திய 'ஏ' அணி 2-5 என்ற கோல் கணக்கில் விக்டோரியா அணியிடமும், மகளிர் பிரிவில் இந்திய 'ஏ' அணி 1-2 என்ற கோல் கணக்கில் மேற்கு ஆஸ்திரேலியா அணியிடமும் வீழ்ந்தது.
*  2018-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தூதராக நியூஸிலாந்து ஆல் ரவுண்டர் கோரே ஆண்டர்சனை ஐசிசி நியமித்துள்ளது.
*  பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரான மிக்கி ஆர்தரின் பதவிக் காலத்தை 2019-ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நீட்டித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com